குடியரசு தினத்தில் இரு மாநிலங்களில் தேசிய கொடியேற்றிய முதல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்..!

இந்தியாதமிழகம்

குடியரசு தினத்தில் இரு மாநிலங்களில் தேசிய கொடியேற்றிய முதல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்..!

குடியரசு தினத்தில் இரு மாநிலங்களில் தேசிய கொடியேற்றிய முதல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்..!

ந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் குடியரசு தினத்தன்று இரு மாநிலங்களிலும் தேசிய கொடியேற்றிய முதல் ஆளுநர் என் பெருமையை தெலுங்கானா புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஆளுநனரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுள்ளார்.

நாடு முழுதும் 73வது குடியரசு தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தெலுங்கானா விற்கும் ஆளுநராக இவர் உள்ளதால் இவர் 7:30 மணிக்கு தெலுங்கானாவில் தேசிய கொடியை ஏற்றி விட்டு தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு வந்தார்.


புதுச்சேரியில் காலை 9 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இதனை தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு, என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அரசின் ஜவகர் பள்ளி மாணவ- மாணவியரின் கலை நிகழ்ச்சி மட்டும் நடத்தப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்ட காவல்துறையின் சிறந்த சேவை புரிந்தவருக்கான விருதினை துணைநிலை ஆளுநர் தமிழிசை வழங்கி கௌரவித்தார்.


இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தலைமைச் செயலர் மற்றும் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் குறைந்த அளவில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப் பட்டிருந்தது. விழாவில் கலந்து கொண்ட அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியில் அமர வைக்கப்பட்டிருந்தனர். விழாவையொட்டி கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Leave your comments here...