ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை – நயினார் நகேந்திரனின் கருத்துக்கு அண்ணாமலை வருத்தம்..!

அரசியல்

ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை – நயினார் நகேந்திரனின் கருத்துக்கு அண்ணாமலை வருத்தம்..!

ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை – நயினார் நகேந்திரனின் கருத்துக்கு அண்ணாமலை வருத்தம்..!

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கில் நீதி வேண்டி பாஜக சார்பில் நேற்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, பொன். ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட பாஜகவினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த உண்ணாவிரத போராட்த்தின் போது பாஜக எம்.எல்.ஏ நயினார் நகேந்திரன் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், தமிழ்நாட்டில் அதிமுக எதிர்க்கட்சி போல செயல்படவில்லை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும் கூட துணிந்து கேள்வி எழுப்புகிறது. சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை. அதிமுக மக்கள் பிரச்சனையை சட்டமன்றத்தில் எப்போதுமே பேசுவதில்லை என்று தெரிவித்து இருந்தார். நயினார் நகேந்திரனின் கருத்துக்கு அதிமுக தலைவர்கள்,. நிர்வாகிகள் என பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நயினார் நகேந்திரனின் கருத்து தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்ததாக கூறினார்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கருத்து பாஜவின் நிலைபாடு இல்லை. வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது. இது குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தேன். அதிமுக எதிர் கட்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடுகள் விவகாரத்தில் சிறப்பாக அதிமுக போராடி வருகிறது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் பாஜக பொருத்தவரை கட்சியின் தொண்டர்களுக்கும் கருத்து தெரிவிக்க இடம் உண்டு. பாஜகவில் இருந்துகொண்டே பாஜகவிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தால் திமுக போல நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்றார்.

சுதந்திரத்திற்காக பாடுபட்ட பாரதி, வேலு நாச்சியார், குயிலி உள்ளிட்ட அனைவரையும் அணிவகுப்பில் காட்சிப்படுத்திய. தமிழக அரசுக்கு நன்றி. இதுபோன்றவர்களின் வரலாற்றை பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டும். தொடர்ச்சியாக இதை காட்சிப்படுத்தும் பிறகு அடுத்த தலைமுறைக்கு அவர்களின் வரலாற்றில் கொண்டு செல்ல வேண்டும். இந்த ஆண்டு இந்திய குடியரசு பேரணியில் தமிழகத்தின் வாகன பங்கேற்கவில்லை கண்டிப்பாக அடுத்த ஆண்டு அங்கு இருக்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

Leave your comments here...