கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்களால் ஏற்றப்பட்ட தேசிய கொடி..! வைரலாகும் புகைப்படம்..!

இந்தியா

கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்களால் ஏற்றப்பட்ட தேசிய கொடி..! வைரலாகும் புகைப்படம்..!

கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்களால் ஏற்றப்பட்ட  தேசிய கொடி..! வைரலாகும் புகைப்படம்..!

புத்தாண்டு தினத்தன்று கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய தேசிய கொடியை நமது நாட்டு ராணுவ வீரர்கள் ஏற்றி உள்ளனர்.

கிழக்கு லடாக் எல்லையில் உள்ள சில பகுதிகளில், சீன ராணுவம் கடந்தாண்டு மே மாதத்தில் அத்துமீறி நுழைந்தது. அதை நமது படைகள் தடுத்து நிறுத்தின. பல சுற்று பேச்சுவார்த்தைக்கு பின், சில இடங்களில் இருந்து படைகள் திரும்ப பெறப்பட்டன. இருப்பினும் சில இடங்களில் இரு நாட்டு படைகளும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

புத்தாண்டு தினத்தில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் தன் தேசியக்கொடியை ஏற்றி, அது தொடர்பான வீடியோவை வெளியிட்டதுடன், சீன மக்களுக்கு நம் ராணுவத்தின் புத்தாண்டு வாழ்த்துகள்’ என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், புத்தாண்டு தினத்தில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நமது தேசியக்கொடியை ராணுவ வீரர்கள் ஏற்றிய புகைப்படத்தை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது

Leave your comments here...