அரவிந்த் கெஜ்ரிவால், பிரியங்காவுக்கு கொரோனா தொற்று உறுதி..!

இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவால், பிரியங்காவுக்கு கொரோனா தொற்று உறுதி..!

அரவிந்த் கெஜ்ரிவால்,   பிரியங்காவுக்கு கொரோனா தொற்று உறுதி..!

டில்லி முதல்வர் கெஜ்ரிவால், பிரியங்காவுக்கு கோவிட் பாதித்ததால் இருவரும் தனிமைப்படுத்தி கொண்டனர்.

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது: எனக்கு கோவிட் தொற்று உறுதியாகி இருப்பதால் நான் தனிமைப்படுத்தி கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் சோதனை செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஒமைக்ரான் தாக்கம் தற்போது டில்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமாக பரவி வருகிறது. முக்கிய அரசியல் தலைவர்கள் பலருக்கு தற்போது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். அவரது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கும் கொரோனா தாக்கம் இருந்ததன் காரணமாக தற்போது அவர் தனிமையில் உள்ளார்.

மேலும் முக்கிய கூட்டங்களில் அவர் கலந்து கொள்வது தள்ளிப் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் நூத்தி இருபத்தி மூன்று பேர் வைரஸ் தாக்கம் காரணமாக மரணமடைந்துள்ளனர்.

Leave your comments here...