15 முதல் 18 வயதுடையோர் தடுப்பூசி செலுத்திய பின் வீட்டில் ஓய்வெடுக்க அறிவுறுத்தல்..!

தமிழகம்

15 முதல் 18 வயதுடையோர் தடுப்பூசி செலுத்திய பின் வீட்டில் ஓய்வெடுக்க அறிவுறுத்தல்..!

15 முதல் 18 வயதுடையோர் தடுப்பூசி செலுத்திய பின் வீட்டில் ஓய்வெடுக்க அறிவுறுத்தல்..!

தடுப்பூசி செலுத்திக்கொண்ட 15 முதல் 18 வயதுடையோர் வீட்டில் ஓய்வெடுக்க அரசு அறிவுரை வழங்கியுள்ளது. ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுடையோருக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக்சின்’ தடுப்பூசி செலுத்தப்படும் என கடந்த டிசம்பர் 25ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் கொடுத்துள்ள அறிவுரைகளின்படி மாநில அரசுகள் அதற்கான பணிகளை மேற்கொண்டது. நேற்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி மாநில மற்றும் யூனியன் அரசுகளிடம் 19,81,97,286 டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது.

இதனால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 32,029 தடுப்பூசி மையங்களில் குறிப்பிட்ட தடுப்பூசி மையங்களில் 15 முதல் 18 வயதுடையோருக்கான தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

மாநில பள்ளிகளில் நோடல் அதிகாரிகளை நியமனம் செய்து தடுப்பூசி செலுத்தும் மாணவர்களை கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக ஒருசில மாநிலங்களில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட்டு வருவதால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மாணவர்கள் ஓய்வெடுக்க விடுப்பு எடுத்து கொள்ளலாம் எனவும், பள்ளிக்கு வரும்போது தடுப்பூசி சான்றிதழ் நகல் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 1ம் தேதி முதல் கோவின் இணையத்தில் 15 முதல் 18 வயதுடையோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே மாணவர்களின் பெற்றோர் எண்ணுக்கு தடுப்பூசி செலுத்தும் மையங்களின் விவரங்கள் அனுப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்தி கொள்ள மையங்களுக்கு செல்லும்போது 10ம் வகுப்பு அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயதுடையோருக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கவுள்ள நிலையில், 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அவசர பயன்பாட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...