கோவில் வளாகத்தை தூய்மைப்படுத்திய சிஆர்பிஎஃப் வீரர்கள்..!

சமூக நலன்தமிழகம்

கோவில் வளாகத்தை தூய்மைப்படுத்திய சிஆர்பிஎஃப் வீரர்கள்..!

கோவில் வளாகத்தை தூய்மைப்படுத்திய சிஆர்பிஎஃப் வீரர்கள்..!

கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவிலை தூய்மைப்படுத்தும் பணியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ஈடுபட்டனர்.

கோவை குருடம்பாளையம் ஊராட்சி, கதிர்நாயக்கன் பாளையத்தில் சி.ஆர்.பி.எப்., மத்திய பயிற்சி கல்லுாரி வளாகம் உள்ளது. இங்கு இந்தியா முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு, பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

பயிற்சியின் ஒரு பகுதியாக ‘ஜங்கிள் டிரெய்னிங்’ எனப்படும் காடு, மலை சார்ந்த பகுதிகளில் வீரர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. பாலமலை கோவிலைச் சுற்றியுள்ள வனப் பகுதியில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள், 10 முதல், 20 நாட்கள் தங்கி, பயிற்சி பெறுகின்றனர். பயிற்சி நிறைவு நாளில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள், அனைவரும் இணைந்து, பாலமலை ரங்கநாதர் கோவில் வளாகத்தை துாய்மை செய்வது வழக்கம்.தற்போது பயிற்சி பெற்ற வீரர்கள், பயிற்சி நிறைவு நாளான நேற்று, கோவில் வளாகத்தைத் துாய்மை செய்து, பஜனை, வழிபாடு செய்து, சி.ஆர்.பி.எப்., வளாகத்துக்கு திரும்பினர்.

இது குறித்து, பாலமலை ரங்கநாதர் கோவில் பரம்பரை தர்மகர்த்தா ஜெகதீசன் கூறுகையில்,” சி.ஆர்.பி.எப்., வீரர்கள் தங்களது கடுமையான பயிற்சிக்கு பின், கோவில் வளாகத்தை துாய்மை செய்வர். பின், ரங்கநாதருக்கு படையல் இட்டு, பஜனை நடத்தி, இறைவனை வழிபட்டு, தங்கள் வளாகத்துக்கு திரும்புவது வழக்கம்” என்றார்.

Leave your comments here...