விடுதலை சிறுத்தை கட்சியினரை கண்டித்து அறிக்கை விட்ட நடிகை கஸ்தூரி

சமூக நலன்

விடுதலை சிறுத்தை கட்சியினரை கண்டித்து அறிக்கை விட்ட நடிகை கஸ்தூரி

விடுதலை சிறுத்தை கட்சியினரை கண்டித்து அறிக்கை விட்ட நடிகை கஸ்தூரி

கடந்த சில தினங்களுக்கு முன்னால் நடிகை கஸ்தூரி சபரிமலை விவகாரம் குறித்து தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இதனைப் பார்த்த விசி.கட்சியினர் தங்களைப் பற்றி அவதூறாக கூறியதாக கூறி பெரம்பலூர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து நடிகை கஸ்தூரி வெளியிட்ட அறிக்கையில்:- தன்னை பற்றி விடுதலை சிறுத்தை கட்சி சேர்ந்த ஒரு சிலர் சமூக வெளியில் தாக்கியும் பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விசிக வில் எனக்கு பல நல்ல நண்பர்கள் இருப்பதால் இந்த திறந்த மடலை எழுதுகிறேன். கடந்த சில நாட்களாக , விடுதலை சிறுத்தை சேர்ந்த சிலர் என்னை சமூக வெளியில் தாக்கியும், பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டும் வருவதை காண்கிறேன். நேற்று போலீசில் பொய் புகார் அளித்துள்ளதாகவும் அறிகிறேன். விசிக திருமாவளவன் அவர்களுக்கும் எனக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தவும் பட்டியலினத்தவருக்கும் எதிரானவள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் முயல்கிறார்கள்.

மதநல்லிக்கணத்துக்கு பெயர் பெற்ற இந்தியாவில் சமீபகாலமாக பெருவாரியான மக்களின் மத நம்பிக்கை அவமதிக்கும் போக்கு பெருகிவருகிறது. கடந்த வாரம் முகநூலில் , புனிதத்தலங்களை அவமதிக்கும் விஷமிகளை விமர்சித்து பதிவிட்டிருந்தேன். அந்த பதிவில் எந்த தனி நபரையோ சமூகத்தையோ குறிப்பிடவில்லை எண்ணும்பொழுது, மதிப்பிற்குரிய திருமாவளவன் MP மற்றும் அவர் சார்ந்த சமூகத்தை பற்றி நான் பதிவிட்டுள்ளேன் என்று தன்னிச்சையாக வந்து வம்பிழுப்பவர்கள் , ஏன் அப்படி அவர்களுக்கு தோன்றுகிறது என்று அவர்கள்தான் விளக்க வேண்டும்.

எந்த தனி நபரையோ ஜாதியையோ நான் குறிப்பிட்டு பேசவில்லை எனும் நிலையில், என் மீது ஆதாரமற்ற வன்கொடுமை புகார் கொடுப்பதெல்லாம் POA சட்டத்தை வியாபார நோக்குடன் அணுகும் செயல். it is a malicious and frivolous case and abuse of the POA act. ஒரு வழக்கறிஞர் இப்படி ஆதாரமற்ற பொய் கேஸ் போட்டால், அதற்கான பின்விளைவுகள் என்ன என்று அந்த வழக்கறிஞர்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக எல்லாம் என் கருத்து குற்றம் ஆகி விடாது. சும்மா இப்படி POA சட்டத்தை இஷ்டத்துக்கு கையாண்டால் நாளை உண்மையான பிரச்சினையில் யார் உங்களை நம்புவார்கள்.

கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் இது போன்ற அவதூறு நடவடிக்கைகள் நான் மிகவும் மதிக்கும் திரு தொல்.திருமாவளவன் அவர்களுக்கு தெரிந்து நடக்கவில்லை என்றே நம்புகிறேன். இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் விடுதலை சிறுத்தையினரை உடனடியாக தலைமை கண்டிக்க வேண்டும். தண்டிக்க வேண்டும் என நடிகை கஸ்தூரி அறிக்கை மூலம் கூறியுள்ளார்

Leave your comments here...