திருமாவளவனை இந்து மதத்தில் இருந்து விலக்கி வைக்கும் சடங்கு- சர்ச்சையை கிளம்பும் இந்து மக்கள் கட்சி அழைப்பிதழ்.!

சமூக நலன்

திருமாவளவனை இந்து மதத்தில் இருந்து விலக்கி வைக்கும் சடங்கு- சர்ச்சையை கிளம்பும் இந்து மக்கள் கட்சி அழைப்பிதழ்.!

திருமாவளவனை இந்து மதத்தில் இருந்து விலக்கி வைக்கும் சடங்கு- சர்ச்சையை கிளம்பும் இந்து மக்கள் கட்சி அழைப்பிதழ்.!

புதுச்சேரியில் நடந்த விசிக மகளிர் மாநாட்டில், இந்து கோவில்கள் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.அதில் பேசிய திருமாவளவன் கூம்பாக இருந்தால் அது மசூதி உயரமாக இருந்தால் அது தேவாலயம் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் கோவில் என்று அவர் சொல்லியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அவரின் கருத்துக்கு இந்துக்கள் பலரும் மற்றும் இந்து அமைப்புகளும் பாஜகவினரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இது குறித்து தமிழகம் முழுவதும் பாஜக , இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, என பல்வேறு இந்து அமைப்புகள் இந்து சமய ஆர்வலர்கள், 200மேற்பட்ட காவல் நிலையங்களில் தொல்.திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்து இருந்தனர்.

இது தொடர்பாக தொல்.திருமாவளவன் எம்பி அவர்கள் தனியார் தொலைக்காட்சி க்கு அளித்த பேட்டியில் :- நான் பேசியதை சரிதான் என்று நியாயப்படுத்த நான் விரும்பவில்லை. யதார்த்தமான போக்கில், கூம்பாக இருந்தால் மசூதி, உயரமாக இருந்தால் தேவாலயம், இந்து கோயில் கூட உயரமாகத்தான் கட்டப்படுகிறது என்று பேசினேன். கோபுரமாக இருந்தால் என்ற வார்த்தையை கூட நான் குறிப்பிட்டு பேசியிருக்கலாம். அந்த நேரத்தில் அந்த சொல் எனக்கு கிடைக்கவில்லை. அசிங்கமான பொம்மைகள் இருந்தால் கோயில் என்றவாறு உரைவீச்சின் போக்கில் அந்த வார்த்தையை பயன்படுத்தி விட்டேன்.

இந்நிலையில் இந்து மக்கள் கட்சி திருமாவளவனை இந்து சமயத்தில் இருந்து விலக்கி வைக்கும் சடங்கு என பத்திரிகை ஒன்றை இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும் தகவல் தொழல்நுட்ப பிரிவை சேரந்த கொக்கிகுமார் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

https://m.facebook.com/story.php?story_fbid=2313586675434790&id=100003504404025

அதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆணைக்கிணங்க, இந்து கோவலில்கள் பற்றியும், இந்து மதத்தை பற்றியும் அவதூறு கருத்தை சொல்லி தரம் தாழ்ந்து அரசியல் செய்யும் தொல் திருமாவளவனை இந்து சமயத்தில் இருந்து , மடாதிபதிகள், துறவி பெருமக்கள், சிவனடியார்கள் இந்து சமய ஆர்வலர்கள் கலந்து கொண்டு சம்பர்தாய சடங்குகள் மூலம் விலக்கி வைக்கும் நிகழ்வு என குறிப்பிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கொக்கி குமார் என குறிப்பிட்டு உள்ளது. இது சமுக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பொருளாக மாறியுள்ளது.

Leave your comments here...