சிலை கடத்தல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது- உயர்நீதிமன்றம் கேள்வி.?

சமூக நலன்

சிலை கடத்தல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது- உயர்நீதிமன்றம் கேள்வி.?

சிலை கடத்தல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது- உயர்நீதிமன்றம் கேள்வி.?

சிலைகடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நிதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இன்றைய விசாரணையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, பொன்மாணிக்கவேல், தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தமிழக அரசு கடந்த இரண்டாண்டுகளில் 31 கோடியே 96 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ள போதிலும், பொன் மாணிக்கவேல் இதுவரை ஒரு வழக்கில் கூட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என தமிழக அரசு தெரிவித்தது.இதைக்கேட்ட நீதிபதிகள்,  பொன் மாணிக்கவேலுக்கு செய்து கொடுத்த வசதிகள் குறித்து தமிழக அரசும், இதுவரை விசாரித்த வழக்கு விபரங்கள் குறித்து பொன் மாணிக்கவேல் தரப்பும் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்

Leave your comments here...