பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 24ம் தேதி தமிழகம் வருகை..!

அரசியல்தமிழகம்

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 24ம் தேதி தமிழகம் வருகை..!

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 24ம் தேதி தமிழகம் வருகை..!

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 24ம் தேதி தமிழகம் வருகிறார். திருப்பூரில் கட்சியின் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்து, அங்கு நடக்கும் மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்தும் பணியில், தேசிய தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, அனைத்து மாவட்டங்களிலும், பாஜகவுக்கு மாவட்ட கட்சி அலுவலகங்கள் கட்டப்பட உள்ளன.முதல் கட்டமாக 17 மாவட்டங்களில், மாவட்ட அலுவலகம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

திருப்பூர், நெல்லை, திருப்பத்துார் மற்றும் வாணியம்பாடியில் பணிகள் முடிந்து, திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளன.இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 24ம் தேதி தமிழகம் வருகிறார். திருப்பூர் செல்லும் அவர், மாவட்ட பா.ஜ., அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

அங்கிருந்தபடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, நெல்லை, திருப்பத்துார், வாணியம்பாடியில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அலுவலகங்களை திறந்து வைக்கிறார். பின், திருப்பூர் அலுவலகத்தில் நடக்கும், தமிழக பாஜகவின் மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். விழாவில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.கூட்டத்தில், தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பாக, நட்டா தமிழக பாஜகவினருக்கு ஆலோசனைகள் வழங்க உள்ளார்.

Leave your comments here...