செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

தமிழகம்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நத்தம், குன்றத்தூர், வழுதலம்பேடு, நந்தம்பாக்கம்,பூந்தண்டலம், பழந்தண்டலம், எருமையூர், திருமுடிவாக்கம், சிறுகளத்தூர் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் நீர்வரத்து அதிகரித்து ஏரி நிரம்பி வருவதால் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. 2 -வது மதகில் இருந்து 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரி திறப்பில் கலெக்டர் ஆர்த்தி, அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நீர்வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதல் கட்டமாக 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1,590 கனஅடியாக உள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave your comments here...