கனமழை – சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகம்

வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக தொடர்ந்து வருகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விடாமல் மழை பெய்துவருகிறது. குறிப்பாக சென்னையில், இரவு முதல் தொடர்ந்து பெய்துவரும் மழையால் சாலையில் நீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் உட்புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

இந்நிலையில், சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் அடுத்த 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...