நவ. 14 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மண்டல முதலமைச்சர்கள் குழுக் கூட்டம்..!

இந்தியா

நவ. 14 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மண்டல முதலமைச்சர்கள் குழுக் கூட்டம்..!

நவ. 14 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மண்டல முதலமைச்சர்கள் குழுக் கூட்டம்..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், தென்மண்டல முதலமைச்சர்கள் குழுக் கூட்டம் வரும் 14 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் திருப்பதியில் நடைபெறுகிறது.

ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாநிலங்களிடையே உள்ள சிக்கல்களை தீர்த்து வைக்கவும் நல்லிணக்கத்துககான ஆலோசனைகள் கூறுவதே இந்த மண்டலக் குழுக்களின் பணியாகும்.

அதன்படி, தென்மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களின் முதல்வர்களும், புதுச்சேரி, அந்தமான், லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களும், திருப்பதியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாடு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், கூடுதல் உறுப்பினர்களான அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.கே.சேகர்பாபு ஆகியோரும் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

Leave your comments here...