இந்த தேதிகளில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஜபி தரிசனம் ரத்து…?

இந்தியா

இந்த தேதிகளில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஜபி தரிசனம் ரத்து…?

இந்த தேதிகளில்  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஜபி தரிசனம் ரத்து…?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 13, 14, 15ம் தேதிகளில் விஐபி தரிசனம் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: திருப்பதியில் தென்மாநில முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான ஆலோசனை கூட்டம் வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநில முதல்வர்களும் மற்றும் அந்தமான், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் கவர்னர்களும் பங்கேற்க உள்ளனர்.

இதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 13, 14, 15ம் ஆகிய தேதிகளில் 3 நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த 3 தினங்களுக்கு தரிசனம் மற்றும் அறைகள் பெறுவதற்கான முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களும் ஏற்கப்படாது. மேலும், நன்கொடை வழங்கிய பக்தர்களுக்கும் அறைகள் ஒதுக்கீடு கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...