குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா : இன்று முதல் 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி

ஆன்மிகம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

6-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) முதல் 9-ம் திரு நாளான வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) வரையிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தொடர்ந்து 10 முதல் 12-ம் திருவிழா நாட்களில் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் கோவில் முன்பாக பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெறுகிறது.

Leave your comments here...