பிரதமர் மோடி அறிவித்த, ‘பிரதமர் கதி சக்தி திட்டம்” வரும் அக்-15ல் துவக்கம்..!

இந்தியா

பிரதமர் மோடி அறிவித்த, ‘பிரதமர் கதி சக்தி திட்டம்” வரும் அக்-15ல் துவக்கம்..!

பிரதமர் மோடி அறிவித்த, ‘பிரதமர் கதி சக்தி திட்டம்” வரும் அக்-15ல் துவக்கம்..!

நாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர தினம் கடந்த ஆக., 15ல் கொண்டாடப்பட்டது. அப்போது டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி பிரதமர் மோடி பேசுகையில், ‘தொழில் துறையில் உலக அளவில் இந்தியா போட்டியிட உதவும் வகையில், ‘பிரதமர் கதி சக்தி’ என்ற தேசிய மாஸ்டர் பிளான் திட்டம் நிறைவேற்றப்படும்’ என்றார்.

இந்த திட்டம் ரூ.100 லட்சம் கோடி மதிப்பில் அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். இத்தகைய மெகா திட்டமான கதி சக்தி திட்டத்தின் மாஸ்டர் பிளானை வரும் 13ம் தேதி பிரதமர் மோடி வெளியிடவுள்ளார். 2024-25 க்குள் இந்தியாவுக்கான மெகா உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு இலக்குகளை எட்ட இந்த திட்டம் உதவும்.

2 லட்சம் கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள், 1,600 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் ரயில்கள், எரிவாயு குழாய் நெட்வொர்க்கை 35,000 கிமீ வரை இரட்டிப்பாக்குதல், மொத்தம் 220 விமான நிலையங்கள், ஏர் ஸ்ட்ரிப்ஸ் மற்றும் ஏரோட்ரோம்களை கொண்டிருத்தல், 11 தொழில்துறை தாழ்வாரங்கள் உட்பட தொழில்களுக்காக 25000 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும் இடங்கள், பாதுகாப்பு உற்பத்தியில் ரூ 1.7 லட்சம் கோடி விற்றுமுதல் அடைவது மற்றும் 2024-25 க்குள் 38 மின்னணு உற்பத்தி கிளஸ்டர்கள் மற்றும் 109 மருந்து உற்பத்தி கிளஸ்டர்களைக் ஏற்படுத்துவது போன்றவற்றை கதி சக்தி திட்டம் கொண்டுள்ளது.

இந்த திட்டம் பற்றி, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிரதமர் கதி சக்தி திட்டம் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும். நிர்வாகத்தில் பெரிய மாற்றத்தை இந்த திட்டம் ஏற்படுத்தும்,.மத்திய அரசின் ௧௬ துறைகள் ஒரே ‘டிஜிட்டல் பிளாட்பார்மில்’ இணைக்கப்பட்டு, 2025ம் ஆண்டு வரைக்கான உள்கட்டமைப்பு பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள இந்த திட்டம் வழிவகுக்கிறது.

இந்த பிளாட்பாரத்தில் இணைய, மாநில அரசுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ரயில்வே, நெடுஞ்சாலை, பெட்ரோலியம், மின்சாரம், தொலை தொடர்பு உள்ளிட்ட ௧௬ துறைகள் ஒரே டிஜிட்டல் பிளாட்பாரத்தில் இணைக்கப்பட உள்ளன. இவை தங்களின் உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களை மற்ற துறைகளுக்கு தெரிவிக்க உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...