ரயில் நிலையங்களில் எச்சில் துப்ப ‘பாக்கெட்’ அளவிலான சிறிய பை அறிமுகம்

இந்தியா

ரயில் நிலையங்களில் எச்சில் துப்ப ‘பாக்கெட்’ அளவிலான சிறிய பை அறிமுகம்

ரயில் நிலையங்களில் எச்சில் துப்ப ‘பாக்கெட்’ அளவிலான சிறிய பை அறிமுகம்

ரயில் நிலையங்களில் பொது மக்கள் எச்சில் துப்புவதால் மிகப் பெரிய அளவில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கொரோனா தொற்று பரவலுக்கு பின் இதுபோல எச்சில் துப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரயில் நிலையங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனாலும் இதை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை.இந்நிலையில் இந்த பிரச்னையை சமாளிக்க, மஹாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த ‘ஈஸி ஸ்பிட்’ என்ற நிறுவனம் புதிய உத்தி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் துணை நிறுவனர் ரிது மல்ஹோத்ரா கூறியதாவது:ரயில் நிலையங்களில் எச்சில் துப்புபவர்களுக்காக பாக்கெட் அளவிலான சிறிய பைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம். ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி இயந்திரங்களில் இருந்து இந்த பைகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த பைகளுக்குள் ஒருவர் 15 – 20 முறை எச்சில் துப்ப இடம் உள்ளது.

அந்த எச்சிலை உறிஞ்சும் விதமாக பைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எச்சிலில் உள்ள கிருமிகள் வெளியே பரவாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைகள் மக்கும் தன்மை உடையவை. இதை மண்ணில் வீசினால், அதில் கலந்துள்ள விதைகள் மரங்களாக முளைக்கும் தன்மை உடையது. சிறிய பைகளுடன், சிறிய கன்டெய்னர்கள் மற்றும் பெரிய குப்பை கூடைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நாக்பூர் மற்றும் அவுரங்காபாத் நகராட்சி மற்றும் சில ரயில் நிலையங்களில் ஏற்கனவே இந்த தானியங்கி இயந்திரங்களை பொருத்தி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.மேற்கு, வடக்கு மற்றும் மத்திய ரயில்வே நிலையங்களில் இந்த தானியங்கி இயந்திரங்களை பொருத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பாக்கெட் அளவிலான ஒரு பைக்கு, 5 – 10 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave your comments here...