மகாத்மா காந்தி பிறந்த நாள்; நினைவிடத்தில் பிரதமர் மோடி , தலைவர்கள் மரியாதை

Scroll Down To Discover
Spread the love

மாகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாளான இன்று அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். பிரதமர் மோடி காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஏராளமான மக்களுக்கு வலிமை தரும் காந்தியின் உன்னத கோட்பாடுகள் உலக அளவில் பொருத்தமானவை” எனப்பதிவிட்டுள்ளார். முன்னதாக காந்தி நினைவிடத்திலும் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

மேலும் முன்னாள் பிரதமரும் சுதந்திர போராட்ட வீரருமான லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “ முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஜி அவர்களுக்கு எனது மரியாதையை உரித்தாக்குகிறேன். அன்னாருடைய வாழ்வின் மதிப்புகள் மற்றும் கொள்கைகள் நாட்டு மக்கள் அனைவருக்கும் உத்வேகத்தை தரும்” எனப் பதிவிட்டுள்ளார்.