குடும்ப ஓய்வூதியத்தை பெறும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வருமான வரம்பு உயர்வு.!

இந்தியா

குடும்ப ஓய்வூதியத்தை பெறும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வருமான வரம்பு உயர்வு.!

குடும்ப ஓய்வூதியத்தை பெறும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வருமான வரம்பு உயர்வு.!

குடும்ப ஓய்வூதியம் அளிக்கப்படும், மன நலம் குன்றிய அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகள்/ உடன்பிறந்தவர்களின் வருவாய் வரம்பை மேம்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி இதுபோன்ற குழந்தை/ உடன் பிறந்தவரது ஒட்டுமொத்த வருமானம் (குடும்ப ஓய்வூதியம் தவிர்த்த ஆதாரங்களின் மூலம்) சாதாரண விகிதத்திலான குடும்ப ஓய்வூதியத்தை விட குறைவாக இருந்தால், (அதாவது உயிரிழந்த அரசு ஊழியர்/ ஓய்வூதியதாரர் கடைசியாக பெற்ற தொகையில் 30 சதவிகிதமும், அகவிலைப்படியும்) வாழ்நாள் முழுவதும் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதி பெறுவார்கள்.

08.02.2021 முதல் இந்த நிதி உதவி அமலுக்கு வரும். தற்போது மாதந்தோறும் ரூ. 9000க்குள் வருமானமும் அகவிலைப்படியும் பெரும் மாற்றுத்திறனாளி குழந்தை/ உடன்பிறந்தோர் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதி பெறுவது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...