பிரதமரின் நினைவுப் பரிசுகள் – பவானி தேவியின் வாளை மின் ஏலத்தின் மூலம் பெறுவதற்கு ஓர் வாய்ப்பு.!

இந்தியாவிளையாட்டு

பிரதமரின் நினைவுப் பரிசுகள் – பவானி தேவியின் வாளை மின் ஏலத்தின் மூலம் பெறுவதற்கு ஓர் வாய்ப்பு.!

பிரதமரின் நினைவுப் பரிசுகள் – பவானி தேவியின் வாளை மின் ஏலத்தின் மூலம் பெறுவதற்கு ஓர் வாய்ப்பு.!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020-ல் கலந்து கொண்ட முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனையான பவானி தேவி பயன்படுத்திய வாள், pmmementos.gov.in என்ற இணையதளத்தில் மின் ஏலத்தில் இடம்பெற்றுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவின்போது இதே வாளை பவானி தேவி, பிரதமருக்குப் பரிசாக அளித்தார். பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்களின் மின் ஏலத்தில் இந்த வாளும் இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2019-ஆம் ஆண்டு இதே போன்ற ஏலம் நடைபெற்றது. அதன் மூலம் அரசுக்குக் கிடைத்த ரூ. 15.13 கோடி முழுவதும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் கங்கை நதியின் தூய்மை பணிக்காக நமாமி கங்கை திட்டத்திற்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை நமாமி கங்கை திட்டத்திற்கு அளிக்கப்படும்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தமது முதல் போட்டியில் வெற்றி பெற்று பவானி தேவி வரலாற்றில் இடம் பெற்றார். எந்த ஒரு இந்திய வாள் வீச்சு வீராங்கனையும் இத்தகைய நிலை வரை செல்லாததால் இது மிகப்பெரும் சாதனையாக அமைந்தது. பதக்கத்திற்கான அடுத்த போட்டியில் அவர் வெற்றி பெறாவிட்டாலும், இந்தியாவின் நம்பிக்கை மற்றும் எழுச்சியை அதிகரிப்பதற்கு இதுவே போதுமானதாக இருந்தது.

தமிழகத்தைச் சேர்ந்த சடலவாடா ஆனந்த சுந்தரராமன் பவானி தேவி, கடந்த 2003-ஆம் ஆண்டு விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டபோது வாள்வீச்சில் அவருக்கு ஆர்வம் இல்லை. பள்ளி விளையாட்டுகளில் கலந்து கொள்ள அவர் முடிவு செய்தபோது வாள் வீச்சை தேர்வு செய்ய நேர்ந்தது. புதுவிதமான விளையாட்டில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு அதில் பயிற்சி பெற்றார்.

நாட்டின் பெருமைமிகு வரலாற்று சிறப்புமிக்க இந்த வாள் உங்களுக்கு உரியதாகலாம். இந்த வாளைப் பெறுவதற்கு 2021 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 7 வரை நடைபெறும் மின் ஏலத்தில் கலந்து கொள்ளுங்கள்.

Leave your comments here...