வௌ்ளத்தில் சிக்கிய நபரை நடு இரவில் ஹெலிகாப்டரில் மீட்ட கடற்படை.!

இந்தியா

வௌ்ளத்தில் சிக்கிய நபரை நடு இரவில் ஹெலிகாப்டரில் மீட்ட கடற்படை.!

வௌ்ளத்தில் சிக்கிய நபரை நடு இரவில் ஹெலிகாப்டரில் மீட்ட கடற்படை.!

ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் ஸ்வர்ணமுகி ஆற்றில் வெள்ளத்தில் சிக்கிய நபரை, இந்தியக் கடற்படை ஹெலிகாப்டர் நள்ளிரவில் மீட்டது.

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம், வெங்கட பைரவ பாலம் கிராமத்தைச் சேர்ந்த திரு சிம்ஹாசலம் (40 ) என்பவர் ஸ்வர்ணமுகி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கினார். அவரை மீட்க கடற்படையின் உதவியை மாவட்ட நிர்வாகம் நேற்று மாலை 5.30 மணியளவில் கோரியது.

இதையடுத்து ஐஎன்எஸ் தெகா கடற்படைத் தளத்திலிருந்து இலகு ரக ஹெலிகாப்டரை கடற்படையின் கிழக்குக் கட்டுப்பாட்டு மையம் மீட்புப்பணிக்கு அனுப்பியது. பலத்த காற்றுடன் மழை பெய்ததாலும், இரவு நேரம் ஆகிவிட்டதாலும், அந்த ஹெலிகாப்டரால் தேடும் பணியில் ஈடுபட முடியவில்லை.

இதையடுத்து ‘ஷீ கிங் 42சி’ ரக ஹெலிகாப்டரை இரவில் பார்க்கக்கூடிய கருவிகளுடன், மீட்புப்பணியை மேற்கொள்ள கடற்படை அனுப்பியது. அந்த ஹெலிகாப்டர் நேற்று இரவு 11 மணியளவில், வெள்ளத்தில் சிக்கிய நபரைக் கண்டுபிடித்து மீட்டது. சரியான நேரத்தில் தன்னைக் காப்பாற்றியதற்காக, இந்தியக் கடற்படைக்கு திரு. சிம்ஹாசலம் நன்றி தெரிவித்தார்.

Leave your comments here...