இடுக்கியில் சிறிய விமானங்கள் இறங்கும் வகையில் விமான நிலையம்; நவம்பரில் திறப்பு

இந்தியா

இடுக்கியில் சிறிய விமானங்கள் இறங்கும் வகையில் விமான நிலையம்; நவம்பரில் திறப்பு

இடுக்கியில் சிறிய விமானங்கள் இறங்கும் வகையில் விமான நிலையம்; நவம்பரில் திறப்பு

கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாறில் ரூ. 13 கோடியில் சிறிய விமானங்கள் இறங்கும் வகையில் விமான நிலையத்தை என்.சி.சி. அதிகாரிகள் அமைத்துள்ளனர்.

சுற்றுலா வருவாயை நம்பியே இடுக்கி மாவட்டம் உள்ளது. இங்குள்ள தேக்கடி, மூணாறு பல சுற்றுலா தலங்களுக்கு உள்நாடு, வெளிநாடு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பெரும்பாலும் எர்ணாகுளம், கோட்டயம், மதுரை வரை விமானம் அல்லது ரயிலில் வருகின்றனர். பின் ரோடு மார்க்கமாகவே இங்கு வர முடியும்.

2017 ல் தேசிய மாணவர் படை சார்பில் இங்கு மாணவர்களுக்கு பறக்கும் பயிற்சியளிப்பதற்காக சிறிய ரக விமானங்களை கையாளும் வகையில் வண்டிப்பெரியாறு அருகில் சத்திரம் என்ற இடத்தில் 12 ஏக்கரில் ரூ. 13 கோடியில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. என்.சி.சி., படைப்பிரிவு அமைத்த முதல் சிறிய விமான நிலையம் இது.

முதன்முதலாக பொதுப்பணித்துறை மூலம் விமான நிலைய கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆயிரம் மீ., நீள ரன்வேயில் தற்போது 650 மீ.,நீளத்திற்கு பணிகள் முடிந்துள்ளன. நவம்பரில் திறக்கப்படுகிறது. 2 பேர் பயணிக்கும் வைரஸ் எஸ்.டபிள்யூ. 80 ரக சிறிய விமானங்கள் முதலில் தரையிறங்க உள்ளன. அடுத்த கட்டமாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சக அனுமதி பெற்று தேவையான மாற்றங்கள் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இடுக்கி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏற்படும் இயற்கை சீற்றங்களின் போது மீட்பு பணிகளை மேற்கொள்ளவும், சுற்றுலா மேம்பாட்டிற்கும், சபரிமலை கோயிலிற்கு முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லவும் இந்த விமான நிலையம் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...