இரு சக்கர வாகனத்தில் செல்லும் பெண்களை குறிவைத்து, வழிப்பறி செய்த இளைஞர் கைது..!

உள்ளூர் செய்திகள்தமிழகம்

இரு சக்கர வாகனத்தில் செல்லும் பெண்களை குறிவைத்து, வழிப்பறி செய்த இளைஞர் கைது..!

இரு சக்கர வாகனத்தில் செல்லும் பெண்களை குறிவைத்து, வழிப்பறி செய்த இளைஞர் கைது..!

திருமங்கலம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் பெண்களை குறிவைத்து, வழிப்பறி செய்த வாலிபர் கைது

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா, மற்றும் அதனை சுற்றியுள்ள வாகைகுளம், மேல உரப்பனூர், சோழவந்தான் ரோடு, விக்கிரமங்கலம், செக்கானுரணி, பெருமாள்கோவில்பட்டி, பெரிய கட்டளை, நத்தப்பட்டி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் தனியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்களிடம் அவர்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை வழிப்பறி போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக புகார் தொடர்ந்து வந்த நிலையில் இருந்தது.

இது சம்பந்தமாக, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், திருமங்கலம் திருமங்கலம் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து சார்பு ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமை காவலர் சரவணகுமார், அருள்ராஜ், சரவணன், வயக்காட்டு சாமி, முத்துக்குமார் ஆகிய போலீசார் முயற்சியில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இந்நிலையில், குற்றச் சம்பவங்கள் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா உதவியால், உசிலம்பட்டி தாலுகா வாலாந்தூர் நாட்டாபட்டியை சேர்ந்த நாககுமார் மகன் ராஜ்குமார் வயது 27 என்பவர் என்று தெரிய வந்தது, அவரை கைது செய்து அவரிடம் இருந்த இருசக்கர வாகனம் மற்றும் 13. 1/2 சவரன் நகை பறிமுதல் செய்தனர்.

மேலும், விசாரனையில் கஞ்சா போதைக்கு அடிமையானதால் இது போன்ற குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதை குற்றவாளி ஒப்பு கொண்டதன் அடிப்படையில், வழிப்பறி நடைபெற்றதை அறிந்த தனிப்படை போலீசார் குற்றவாளி மீது வழக்கு பதியபட்டு சிறையில் அடைத்தனர்.

மேலும், தொடர் கொள்ளைகளை தடுக்கும் வகையில் போலிசார் தீவிர ரோந்து பணி ஈடுபடுத்தபட்டுள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் விதத்தில் உடனடியாக போலீஸ் அவசர உதவி எண் 100 ஐ தொடர்புகொள்ள வழியுறுத்தியும் பாதுகாப்பாக வெளி பயணம் செய்யவும் திருமங்கலம் தாலுகா மற்றும் டவுன் போலீசாரும் வழியுறுத்தியுள்ளனர்.

பெண்கள் கிராம பகுதிகளில் விசேஸம் மற்றும் பணிக்கு செல்ல கூடிய பெண்கள் உடன் பாதுகாப்பாக துனையுடன் செல்வது அல்லது நல்ல எச்சரிக்கயுடன் செல்ல பொதுமக்களுக்கு நமது செய்திகள் மூலம் அறிவிப்பை தெறிவித்துள்ளனர்.

செய்தி : ரவிசந்திரன்

Leave your comments here...