தமிழர்களின் சிலம்பம் விளையாட்டிற்கு மத்திய அரசு அங்கீகாரம் – அமைச்சர் மெய்யநாதன் தகவல்

இந்தியாதமிழகம்விளையாட்டு

தமிழர்களின் சிலம்பம் விளையாட்டிற்கு மத்திய அரசு அங்கீகாரம் – அமைச்சர் மெய்யநாதன் தகவல்

தமிழர்களின் சிலம்பம் விளையாட்டிற்கு மத்திய அரசு அங்கீகாரம் – அமைச்சர் மெய்யநாதன் தகவல்

தமிழர்களின் சிலம்பம் விளையாட்டிற்கு மத்திய அரசின் விளையாட்டுத்துறை அங்கீகாரம் அளித்துள்ளதாக இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் வீர கலையான சிலம்பத்தை உலகறியச் செய்ய ஒன்றிய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப்போட்டியில் சிலம்ப விளையாட்டை சேர்க்க முதல்வர் மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதையேற்ற ஒன்றிய அரசு சிலம்ப விளையாட்டை அங்கீகரித்து புதிய கேலோ இந்தியா திட்டத்தின் கீழான விளையாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய ஊக்குவித்தல் என்ற பெயரில் சிலம்பத்தை சேர்த்துள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்திற்கு மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்திருப்பது தமிழினத்துக்கு பெருமை சேர்த்துள்ளது. தடியை கையாண்டு கால், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதே சிலம்பம் தற்காப்புக் கலை. ஆண்கள், பெண்கள் இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நடைபெறும் திருவிழாக்களிலும் கோவில் விழாக்களிலும் சிலம்ப விளையாட்டு இடம்பெறுகிறது. பழங்குடி மக்கள் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய விளையாட்டு ஆணையத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave your comments here...