குருநானக் தேவின் 550-வது பிறந்தநாள் : கர்த்தார்பூர் வழித்தடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…!

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக், தனது இறுதி காலத்தை தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கு உட்பட்ட கர்தார்பூரில் கழித்ததாக கூறப்படுகிறது. அங்கு அவர் 18 ஆண்டுகள் தனது கடைசி காலத்தை கழித்தார். அவரது நினைவாக கர்தார்பூரில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தர்பார் சாகிப் என்ற பெயரில் குருத்வாரா நிறுவப்பட்டுள்ளது.
இந்த குருத்வாராவிற்கு சீக்கியர்கள் பயணம் மேற்கொள்ள விசா வாங்கிச் செல்வதில் சிரமங்கள் இருந்ததால் கர்தார்பூர் வழித்தடம் அமைக்க இருநாடுகளிடையே முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக்கிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாகிஸ்தானின் கர்தார்பூருக்கு வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அலங்கரிக்கப்பட்டுள்ள கர்தார்பூர் வழிபாட்டு தல வளாகத்தின் புகைப்படங்களை தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டர். அதில் அவர், ‘சீக்கிய யாத்திரீகர்களை வரவேற்க கர்தார்பூர் தயாராகி விட்டது,’ என அழைப்பு விடுத்துள்ளார். மேலும் தனது அரசையே பாராட்டி உள்ள அவர், ‘குருநானக்கின் 550ம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடுவதற்காக குறிப்பிட்ட காலத்திற்குள் கர்தார்பூர் பணிகளை நிறைவேற்ற நமது அரசுகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்,’ என கூறியுள்ளார். இந்நிலையில், வரும் 12ம் தேதி குருநானக்கின் 550-வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, கர்தார்பூர் வழித்தடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. கர்தார்பூர் வழித்தடத்தை இந்தியாவில் பிரதமர் மோடியும், பாகிஸ்தானில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானும் திறந்து வைத்தனர்.
குருநானக் தேவ் 550வது பிறந்தநாளுக்கு முன்னதாக கர்தார்பூர் சாஹிப் சிறப்பு சாலை திறக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்தியாவின் உணர்வுகளை மதித்த பாக்., பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி. இவ்வாறு மோடி பேசினார்.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அப்போது மன்மோகன் சிங்கை பிரதமர் மோடி சந்தித்தார். இருவரும் ஒருவொருக்கொருவர் ஆரத்தழுவி நலம் விசாரித்துக்கொண்டனர். பின்னர் இருவரும் கைக்குலுக்கி நன்றி தெரிவித்தனர்.
Blessed morning at the Shri Gurudwara Ber Sahib in Sultanpur Lodhi. pic.twitter.com/1lpwHRZbLT
— Narendra Modi (@narendramodi) November 9, 2019
மேலும் கர்தார்பூர் வரும் இந்திய யாத்ரீகர்களுக்கு இன்றும், வரும் 12ம் தேதியும் கட்டணம் வசூலிக்கப்படாது என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. கர்தார்பூர் வழியாக நாள்தோறும் 5 ஆயிரம் யாத்ரீகர்களுக்கு அனுமதியளிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
Leave your comments here...