மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ்க்கு ஆட்சி அமைக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார் ..!

அரசியல்

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ்க்கு ஆட்சி அமைக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார் ..!

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ்க்கு ஆட்சி அமைக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார் ..!

மகாராஷ்டிராவில், 288 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு அண்மையில் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் 161 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க., சிவசேனா கூட்டணி (105-56) ஆட்சி அமைப்பதில் 10 நாட்களுக்கும் மேலாக இழுபறி நீடித்து வருகிறது.முதல் மந்திரி பதவியை தலா 2½ ஆண்டுகள் சுழற்சி அடிப்படையிலும், மந்திரி பதவிகளை சரிசமமாகவும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கையை பா.ஜ.க. நிராகரித்துவிட்டதால் இந்த இழுபறி தொடர்கிறது.

இதற்கிடையே, பா.ஜ.க.வை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரி பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து அளித்தார்.

அப்போது மாற்று ஏற்பாடு செய்யும் வரை முதல்-மந்திரி பதவியில் நீடிக்குமாறு தேவேந்திர பட்னாவிசை ஆளுநர் கேட்டுக்கொண்டார்.இந்நிலையில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், தனிப்பெரும் கட்சி என்ற முறையில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்க்கு ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். வரும் 11 ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் கெடு விதித்துள்ளார்.

Leave your comments here...