காவேரி , தாமிரபரணி புஷ்கரனை தொடர்ந்து அசாமில் பிரம்மபுத்திரா புஷ்கர விழா- அசாம் மாநில முதல்வர் சர்பானந்த துவங்கி வைத்தார்..!

ஆன்மிகம்

காவேரி , தாமிரபரணி புஷ்கரனை தொடர்ந்து அசாமில் பிரம்மபுத்திரா புஷ்கர விழா- அசாம் மாநில முதல்வர் சர்பானந்த துவங்கி வைத்தார்..!

காவேரி , தாமிரபரணி புஷ்கரனை தொடர்ந்து அசாமில் பிரம்மபுத்திரா புஷ்கர விழா- அசாம் மாநில முதல்வர் சர்பானந்த துவங்கி வைத்தார்..!

பாரத தேசத்தில் தொன்று தொட்டு விளங்கும் புண்ணிய நதிகளில் ஒன்று பிரம்மபுத்திரா. ஆசியாவில் இருக்கும் பெரிய நதிகளில் ஒன்று. கைலாயமலையில் பிறந்து (உற்பத்தி) திபெத்தில் இமாலய பள்ளத்தாக்குகளில் தவழ்ந்து, அஸ்ஸாமில் “புஷ்கரவாஹினி’ என்ற நாமத்துடன் நுழைகின்றது. நதிகளிலேயே ஆண் நதியாக சித்தரிக்கப்படுவது பிரம்மபுத்திரா மட்டுமே (பிரம்மாவின், புத்திரன்) பல புராண வரலாற்றுப் பின்னணியுடன் திகழும் இந்த நதி பாய்ந்து வளப்படுத்தும் கௌஹாத்தியில் (அஸ்ஸாம் மாநிலம்) புஷ்கரவாஹினி புஷ்கரம் நடைபெறுவது மிகவும் சிறப்பானது.

பிரம்மபுத்திரா புஷ்கர விழாவில் அசாம் முதல்வர் கொடியேற்றிய துவங்கிய போது

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பிரம்மபுத்திரா புஷ்கர நிகழ்ச்சியின் சிறப்பு மலரை புஷ்கர புகழ் மகாலட்சுமி சுப்பிரமணியம் அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனாவால் அவர்களுக்கு வழங்கியபோது.!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அசாமில் பிரம்மபுத்திரா புஷ்கர நிகழ்வில் தமிழக அமைச்சர் ஒ.எஸ்.மணியன் கலந்து கொண்டார்

 

அசாம் மாநிலம் சாந்திப்பூரில் உள்ள பிரம்ம புத்திரா நதி கரையில் புஷ்கர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் பூஜையில் அசாம் முதல்வர் சர்பானந்த சோனாவால், தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் நாடு முழுவதும் உள்ள புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட ​தீர்த்தங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மேளதாளம் முழங்க பிரம்மபுத்திரா நதிக்கு எடுத்து செல்லப்பட்டது.

பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் அவர்களும் பிரம்மபுத்திர நதியில் புனித நீராடினர்

12 நாட்கள் நடைபெறும் புஷ்கர விழா ஏற்பாடுகளை, அசாம் மாநில அரசுடன் இணைந்து காஞ்சி காமகோடி பீட நிர்வாகிகள் செய்துள்ளனர். இவ்விழாவில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகள், ஆதீனகர்த்தர்கள், மடாதிபதிகள் ஆசிகளுடனும், அஸ்ஸாம் மாநிலத்து ஆளுநர், அமைச்சர் பெருமக்கள், அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் ஒத்துழைப்புடன் இந்த புஷ்கரம் விழா நடைபெறுகிறது.

அர்ஜூன் சம்பத் அவர்கள் பிரம்மபுத்திரா புஷ்கரன் விழாவில் கலந்து கொண்ட போது அருகில் வளசை ஜெயராமன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

புஷ்கரன் விழாவில் முத்துசாமி குருக்கள் கலந்து கொண்டார் உடன் வளசை ஜெயராமன்

 

 

 

 

 

 

 

 

 

 

இதில் நான்காவது நாள் நிகழ்ச்சி மாலை மகா ஆரத்தி சிறப்பாக நடைபெற்றது.  இதில் தமிழகத்திலிருந்து ஸ்ரீ வேளாக்குறிச்சி ஆதீனம், ஸ்ரீ செங்கோல் ஆதீனம், ஸ்ரீ உமாமகேஸ்வர ஆதீனம் , மற்றும் தமிழகத்தின் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், முத்துசாமி குருக்கள், வளசை ஜெயராமன் ஆகியோர்கள் கலந்து கொண்டு புண்ணிய நதியில் மகா ஆரத்தியில் கலந்து கொண்டனர். இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தது உள்ளார்கள்.

தொடர்புக்கு:

மகாலட்சுமி சுப்ரமணியம் – 98400 53289,
வளசை கே.ஜெயராமன்- 94442 79696.

Leave your comments here...