அயோத்தி வழக்கு : 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு-இஸ்லாமியர்களுக்கு மாற்று நிலம் : அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி..!

சமூக நலன்

அயோத்தி வழக்கு : 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு-இஸ்லாமியர்களுக்கு மாற்று நிலம் : அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி..!

அயோத்தி வழக்கு : 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு-இஸ்லாமியர்களுக்கு மாற்று நிலம் :  அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி..!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கை வழக்கில் காலை 10.30 மணியளவில் இருந்து சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு இறுதி தீர்ப்பினை வாசித்து வருகிறது.

இதில், அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு வழங்குகிறோம் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறினார்.  தொடர்ந்து, சன்னி பிரிவுக்கு எதிரான ஷியா வக்பு போர்டு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

அயோத்தி தீர்ப்பு…

*ஒருவரின் மத நம்பிக்கையில் மற்றொருவரின் மத நம்பிக்கை தலையிட முடியாது

* அயோத்தியில் பாபரால் மசூதி கட்டப்பட்டதை உச்சநீதிமன்றம் ஏற்று கொள்கிறது

* சர்ச்சைக்குரிய இடத்தில் 1949-ல் ராமர் சிலை வைக்கப்பட்டது.

* ராம்லல்லா அமைப்புக்கு மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு தொடர அதிகாரம் உள்ளது

* இந்து அமைப்பான நிர்மோகி அகாரா தாக்கல் செய்த மனு மிகவும் தாமதமானது

* அயோத்தியில் பாபர் மசூதி காலி மனையில் கட்டப்பட்டதாக கூறப்படுவது தவறு

* அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் அங்கு இஸ்லாமிய கட்டடங்கள் எதுவும் இல்லை

*ராமர் தொடர்பான ஹிந்துக்களின் நம்பிக்கை, சர்ச்சைமற்றும் விவாதத்திற்கு அப்பாற்பட்டது

*சட்டத்தின் அடிப்படையில் தான் நிலத்திற்கு உரிமை கோர முடியும்

*ஆவணப்படி அயோத்தி நிலம் அரசுக்கே

*மத நம்பிக்கை என்பது குடிமகனின் அடிப்படை உரிமை

*சர்ச்சை கட்டடம் இஸ்லாமிய முறையில் இல்லை.

பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்கள் இடம் என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை. 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல்.

இஸ்லாமியர்களுக்கு மாற்று நிலம் வழங்க வேண்டும். வக்பு போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். அதை 3 மாத காலங்களுக்குள் இந்த தீர்ப்பை செயல்படுத்த வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்ட, ஒரு அமைப்பை மூன்று மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.

 

 

Leave your comments here...