அயோத்தி வழக்கு : நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு : வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை : அமைதி காக்கவும் பிரதமர் மோடி வேண்டுகோள்..!

சமூக நலன்

அயோத்தி வழக்கு : நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு : வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை : அமைதி காக்கவும் பிரதமர் மோடி வேண்டுகோள்..!

அயோத்தி வழக்கு : நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு : வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை : அமைதி காக்கவும் பிரதமர் மோடி வேண்டுகோள்..!

அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது.40 நாட்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பின் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து உத்தரபிரதேச தலைமை செயலாளர் ராஜேந்திர குமார் திவாரி, டிஜிபி ஓம் பிரகாஷ் சிங் மற்றும் காவல்துறை மூத்த அதிகாரிகளுடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தமது அறையில் நேற்று ஆலோசனை நடத்தினார். அயோத்தி தீர்ப்பு வெளியாகும் போது பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

அதேசமயம் துக்கம் அனுசரிக்கும் வகையிலும் யாரும் செயல்படக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் தீர்ப்புக்கு ஆதரவாகவோ, எதிர்ப்பு தெரிவித்தோ எவ்வித விமர்சனங்களையும் வெளியிடக்கூடாது எனவும், தீர்ப்பை விமர்சித்தோ, பாராட்டியோ துண்டு பிரசுரங்கள், பேனர்கள் வைக்கக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.குறிப்பாக சமூக வலை தளங்களில் அயோத்தி தீர்ப்பு தொடர்பாக யாரும் கருத்துகளை பதிவிடக் கூடாது என்றும் காவல்துறை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

மேலும் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஜம்மு நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் அமைதி காக்கும்படி, பிரதமர் மோடி டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்அதில்:- சுப்ரீம் கோர்ட்டில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை நாடு முழுவதிலும் உள்ள மக்கள், ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இக்காலகட்டத்தில், சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அமைதி காட்டியது பாராட்டப்பட வேண்டியது. நீதிமன்ற தீர்ப்புக்குப்பின்னும், நாம் அனைவரும் ஒன்றாக நல்லிணக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

அயோத்தி வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும், அது யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ இருக்காது. இம்முடிவு, இந்தியாவின் அமைதி, ஒற்றுமை, நல்லெண்ணம் நிறைந்த நமது பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave your comments here...