பாம்பனில் புதிய ரயில் பாலம் : புயல் வந்தாலும் விழாது.! பூஜைகளுடன் தொடங்கிய பணிகள்.!

சமூக நலன்

பாம்பனில் புதிய ரயில் பாலம் : புயல் வந்தாலும் விழாது.! பூஜைகளுடன் தொடங்கிய பணிகள்.!

பாம்பனில் புதிய ரயில் பாலம் : புயல் வந்தாலும் விழாது.! பூஜைகளுடன் தொடங்கிய பணிகள்.!

ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலம் 104 வருட பழமையானது. 1914 ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த பாலம், 2006-ல் அகல பாதையாக மாற்றப்பட்டது. சமீபத்தில், இதன் தூக்கு பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் ராமேஸ்வரம் ரயில்கள் மண்டபத்துடன் நிறுத்தப்படுகின்றன.

கடந்த 1914-ம் ஆண்டு பாம்பனில் கடல் மீது 2 கி.மீ. நீளத்துக்கு கட்டப்பட்ட ரெயில் பாலத்தின் வழியாக 105 ஆண்டுகளாக போக்குவரத்து நடந்து வருகிறது. இதில் உள்ள தூக்குப்பாலம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வலுவிழுந்ததால் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ரெயில்கள் இந்த பாலத்தில் செல்லவில்லை. கடந்த ஜனவரி மாதம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வந்த பிரதமர் நரேந்திர மோடி பாம்பனில் புதிய ரெயில் பாலம் கட்டப்படும் என அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ரெயில்வே அமைச்சகத்தின் மூலம் பாம்பன் கடலில் மண் ஆய்வும் நடைபெற்றது.
ஆய்வுக்கு பின்னர் பாம்பன் பாலத்துக்கு பதிலாக ரூ.250 கோடி செலவில் புதிய ரயில் பாலம் கட்டப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்தது.

இப்போது இருக்கும் பாலத்துக்கு அருகிலேயே அதைவிட 3 மீட்டர் அதிக உயரத்தில் இந்தப் பாலம் கட்டப்படுகிறது.கடந்த மார்ச் மாதம் கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புதிய பாம்பன் பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில் இன்று பூமி பூஜையுடன் பாலம் கட்டும் பணிகள் தொடங்கின. 250 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள இந்த பாலம் 101 தூண்களைக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Pictures: பாம்பன் புதிய பாலம் பூமி பூஜை

மேலும் குஜராத்தைச் சேர்ந்த ரஞ்சித் பில்டர்ஸ் என்ற நிறுவனம் பாலம் கட்டும் பணியை மேற்கொள்கிறது.

இது பழைய பாலம் போன்றே கப்பல்கள் வந்தால் திறந்து மூடும் வகையில் அமைக்கப்படவுள்ள இந்த பாலத்தின் பணிகளை 3 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் ஒரே நேரத்தில் 2 கப்பல்கள் கடந்து செல்லலாம். தூக்கு பாலம், தானியங்கி முறையில் செங்குத்தாக திறந்து மூடும் வகையில் கட்டப்பட இருக்கிறது. புதிய பாலம் இரட்டை ரயில் பாதையாக அமைகிறது. இந்த பூஜையின் போது இந்திய ரயில்வேயின் ஆய்வு குழுவினர் மற்றும் முதன்மை பொறியாளரும், தனியார் கட்டுமான அதிகாரிகளும் பூஜையில் கலந்து கொண்டனர்.

Leave your comments here...