பாதுகாப்புத்துறை புத்தாக்கத்துக்கு ரூ.498.8 கோடி செலவு செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒப்புதல்.!

இந்தியா

பாதுகாப்புத்துறை புத்தாக்கத்துக்கு ரூ.498.8 கோடி செலவு செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒப்புதல்.!

பாதுகாப்புத்துறை புத்தாக்கத்துக்கு ரூ.498.8 கோடி செலவு செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர்  ஒப்புதல்.!

பாதுகாப்புத்துறை புத்தாக்கத்துக்கு ரூ.498.8 கோடி செலவு செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

பாதுகாப்புத்துறையில் புதுமையான தொழில்நுட்பங்களை புகுத்த பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறையில் (DDP) புத்தாக்க அமைப்பு (DIO)உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் சிறப்பு பாதுகாப்புக்கான கண்டுபிடிப்புகள் திட்டம் (iDEX) உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு புதியவற்றை கண்டுபிடிப்பதற்கு உதவ ரூ.498.8 கோடி மதிப்பிலான பட்ஜெட்டுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த ‘ஐடெக்ஸ்-டியோ’ திட்டத்தின் அடிப்படை நோக்கம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் வான்துறையில் தற்சார்பு மற்றும் உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிப்பதாகும். இதனால் இத்திட்டம் பிரதமர் தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும். பாதுகாப்புத்துறை மற்றும் வான்துறையில் குறுசிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தொடக்க நிறுவனங்கள், தனிப்பட்ட புதுமை கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை ஈடுபடுத்தி புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை வளர்க்கும் சூழலை உருவாக்குவதுதான் ‘ஐடெக்ஸ்’ திட்டத்தின் நோக்கம்.

இதற்காக இந்த திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.498.8 கோடி நிதி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் 300 நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும்.

பாதுகாப்புத்துறையின் தேவைகளுக்கு புத்தாக்க தீர்வுகளை வழங்க, இந்திய புத்தாக்க சூழலில் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த பட்ஜெட் உதவும். இந்திய பாதுகாப்பு உற்பத்தி துறையுடன் புதிய கண்டுபிடிப்பாளர்களை இணைப்பதற்கான ஏற்பாடுகளை ‘டியோ’ அமைப்பும் அதன் குழுக்களும் செய்யும்.இந்த நீண்ட கால பயனை பெறும் புதுமை கண்டுபிடிப்பு நிறுவனங்கள், இந்திய ராணுவத்துக்கு தொடர்ந்து சப்ளை செய்யும் சூழலை ஏற்படுத்தும்.

Leave your comments here...