ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இளைஞர் மயிலாடுதுறையில் கைது.!

தமிழகம்

ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இளைஞர் மயிலாடுதுறையில் கைது.!

ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இளைஞர் மயிலாடுதுறையில் கைது.!

மயிலாடுதுறை மாவட்டம் நீடூரில் உள்ள ஒரு கோழி இறைச்சிக் கடையில் கோவையைச் சேர்ந்த அப்துல்ரகுமான் மகன் முகம்மது ஆசிக்(30) என்பவர் கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு தமிழ்நாடு தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ), மயிலாடுதுறை தனிப்படை போலீஸாரின் உதவியுடன் முகம்மது ஆசிக்கை கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து மயிலாடுதுறை எஸ்பி ஸ்ரீநாதா கூறியதாவது: கோவையைச் சேர்ந்த முகம்மது ஆசிக், ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக 2018-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்து, போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இதுதொடர்பான வழக்கு சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சிறப்பு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் முகம்மது ஆசிக் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே, சிறப்பு நீதிமன்றம் முகம்மது ஆசிக் மீது பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்தது. இதையடுத்து, தமிழ்நாடு தேசிய புலனாய்வு அமைப்பினர் முகம்மது ஆசிக்கை தேடி வந்தனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் உள்ளஒரு கோழி இறைச்சிக் கடையில்முகம்மது ஆசிக் வேலை பார்த்துவருவது தெரியவந்தது. அதன்பேரில், மயிலாடுதுறை தனிப்படை போலீஸாரின் உதவியுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு தேசிய புலனாய்வு அமைப்பினர், முகம்மது ஆசிக்கை கைது செய்து, சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்றார்.

Leave your comments here...