தண்ணீர் மினி லாரி கவிழ்ந்து விபத்து ஓட்டுநர் காயம்.!

தமிழகம்

தண்ணீர் மினி லாரி கவிழ்ந்து விபத்து ஓட்டுநர் காயம்.!

தண்ணீர் மினி லாரி கவிழ்ந்து விபத்து ஓட்டுநர் காயம்.!

மதுரை திருநகர் ஒன்றாவது பேருந்து நிறுத்தம் அருகே இன்று காலை குடிநீர் சப்ளை செய்யும் தனியார் மினி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக நாய் ஒன்று குறுக்கே வந்ததால் நாய் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் திடீரென்று பிரேக் அடித்தால் அப்போது எதிர்பாராதவிதமாக வாகனம் தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுநர் அங்குள்ள பொதுமக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ் ராம் போக்குவரத்து மாற்றம் செய்து வாகனத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார் .

இதனால், சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது அதிகாலை நேரம் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து, திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave your comments here...