பயணிகளின் ஆதரவின்மையால் முக்கிய ரயில்கள் ரத்து – மதுரை கோட்டம் அறிவிப்பு.!

தமிழகம்

பயணிகளின் ஆதரவின்மையால் முக்கிய ரயில்கள் ரத்து – மதுரை கோட்டம் அறிவிப்பு.!

பயணிகளின் ஆதரவின்மையால் முக்கிய ரயில்கள் ரத்து – மதுரை கோட்டம் அறிவிப்பு.!

பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் பல்வேறு முக்கிய ரயில்கள் மே மாதத்தில் ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் இன்று அறிவித்துள்ளது.

தென்னக ரயில்வேயின் மதுரை கூட்டம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

1. வண்டி எண் 02636 மதுரை – சென்னை எழும்பூர் வைகை சிறப்பு ரயில் மே 8 முதல் முதல் மே 31 வரையும் மற்றும் வண்டி எண் 02635 சென்னை எழும்பூர் – மதுரை வைகை சிறப்பு ரயில் மே 9 முதல் ஜூன் 1 வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
2. வண்டி எண் 02606 காரைக்குடி – சென்னை எழும்பூர் பல்லவன் சிறப்பு ரயில் மே 9 முதல் ஜூன் 1 வரையும் மற்றும் வண்டி எண் 02605 சென்னை எழும்பூர் – காரைக்குடி பல்லவன் சிறப்பு ரயில் மே 8 முதல் மே 31 வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
3. வண்டி எண் 02613/02614 சென்னை எழும்பூர் – மதுரை – சென்னை எழும்பூர் தேஜாஸ் சிறப்பு ரயில் மே 8 முதல் மே 31 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

4. வண்டி எண் 06157 சென்னை எழும்பூர் – மதுரை வாரமிருமுறை சேவை சிறப்பு ரயில் மே 14, 16, 21, 23, 28, 30 ஆகிய நாட்களிலும் வண்டி எண் 06157 மதுரை – சென்னை எழும்பூர் வாரமிருமுறை சேவை சிறப்பு ரயில் மே 13, 15, 20, 22, 27, 29 ஆகிய நாட்களிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

5. வண்டி எண் 06019 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – மதுரை வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் மே 10, 12, 14, 17, 19, 21, 24, 26, 28 ஆகிய நாட்களிலும் வண்டி எண் 06020 மதுரை – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் மே 11, 13, 16, 18, 20, 23, 25, 27, 30 ஆகிய நாட்களிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
6. வண்டி எண் 06063 சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் மே 13, 20, 27 ஆகிய நாட்களிலும் வண்டி எண் 06064 நாகர்கோயில் – சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு ரயில் மே 14, 21, 28 ஆகிய நாட்களிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

7. வண்டி எண் 06191 தாம்பரம் – நாகர்கோவில் தினசரி சேவை சிறப்பு ரயில் மே 8 முதல் மே 31 வரையும் வண்டி எண் 06192 நாகர்கோவில் – தாம்பரம் தினசரி சேவை சிறப்பு ரயில் மே 9 முதல் ஜூன் 1 வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
8. வண்டி எண் 06065 தாம்பரம் – நாகர்கோவில் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் மே 9, 10, 12, 16, 17, 19, 23, 24, 26, 30, 31 ஆகிய நாட்களிலும் வண்டி எண் 06066 நாகர்கோவில் – தாம்பரம் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் மே 10, 11, 13, 17, 18, 20, 24, 25, 27, 31 மற்றும் ஜூன்1 ஆகிய நாட்களிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
9. வண்டி எண் 06791 திருநெல்வேலி – பாலக்காடு பாலருவி சிறப்பு ரயில் மே 8 முதல் மே 31 வரையும் வண்டி எண் 06792 பாலக்காடு – திருநெல்வேலி பாலருவி சிறப்பு ரயில் மே 9 முதல் ஜூன் 1 வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...