மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 12000 குதிரை திறன் சக்தி கொண்ட 100-வது எஞ்சின் இந்திய ரயில்வேயில் இணைப்பு

இந்தியா

இந்திய ரயில்வேக்கு பெருமை சேர்க்கும் விதமாக, 12000 குதிரை திறன் சக்தி கொண்ட 100-வது 12 பி எஞ்சின் இணைத்துக் கொள்ளப்பட்டது.60100 என்ற எண்ணுடன் வேக் 12 பி என்று இந்த எஞ்சினுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

மாதேபுரா எலெக்ட்ரிக் லோகோமோட்டிவ் பிரைவேட் லிமிடெட்டால் இந்த எஞ்சின் தயாரிக்கப்பட்டுள்ளது. ஐஜிபிடி அடிப்படையிலான, அதி நவீன, 3 கட்ட செயல்பாட்டுடன் கூடிய இந்த எஞ்சின், 12,000 குதிரை திறன் சக்தி கொண்டது.

சரக்கு ரயில்களின் வேகம் மற்றும் திறன் மேம்படுவதால், போக்குவரத்து அதிகமுள்ள வழித்தடங்களில் நெரிசலைக் குறைக்க இந்தளவு குதிரை திறனை கொண்ட எஞ்சின்கள் உதவும். 25 டன்கள் வரையிலான சரக்கை ஒரு மணிக்கு 120 கி.மீ வேகத்தில் எடுத்து செல்ல இவற்றால் முடியும். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அதிக சக்தி கொண்ட இந்த எஞ்சின்கள் தயாரிக்கப்படுகின்றன.

பிரத்தியேக சரக்கு வழித்தடத்தின் நிலக்கரி ரயில்களின் போக்குவரத்தை இந்த எஞ்சின்கள் திறம்பட மாற்றியமைக்கும். ஜிபிஎஸ் மூலம் இவற்றை கண்காணிக்க முடியும்.

இந்த வகையிலான எஞ்சின்கள் 17 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்கு பல்வேறு பொருட்களை எடுத்து சென்று, 4.8 மில்லியன் கிலோமீட்டர்களை இது வரை கடந்துள்ளன

Leave your comments here...