10 ஆண்டுகளுக்குப்பின் தமிழகத்தில் திமுக ஆட்சி.. தமிழக முதல்வராக ஸ்டாலின் – 5 கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்து.!

அரசியல்தமிழகம்

10 ஆண்டுகளுக்குப்பின் தமிழகத்தில் திமுக ஆட்சி.. தமிழக முதல்வராக ஸ்டாலின் – 5 கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்து.!

10 ஆண்டுகளுக்குப்பின் தமிழகத்தில்  திமுக ஆட்சி.. தமிழக முதல்வராக ஸ்டாலின் – 5 கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்து.!

10 ஆண்டுகளுக்குப்பின் திமுக ஆட்சி கட்டிலில் அமர்கிறது. சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் இன்று முதல்வராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் மு.க.ஸ்டாலின் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு உள்ளார்.

முன்னதாக அமைச்சர்களை கவர்னரிடம் அறிமுகம் செய்தார் ஸ்டாலின். காலை 9;10 மணியளவில் கவர்னர் பன்வாரிலால் ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர்.

கொரோனா காரணமாக எளிய முறையில் கவர்னர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடந்தது. முன்னாள் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் , உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் , நீதிபதிகள், என விழாவில் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.

விழாவில் ஐகோர்ட் நீதிபதிகள், தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அதிமுக ஒருங்கிணப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ., மூத்த தலைவர் இல.கணசேன், காங்., தலைவர் அழகிரி, தமிழக காங்., மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், மதிமுக பொதுசெயலர் வைகோ, மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்,சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இடதுசாரயின் முத்தரசன், கொங்கு., ஈஸ்வரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

ஸ்டாலின் அவரது உறுதியேற்பில் எடுக்கும் போது கவர்னர் எம்.கே. ஸ்டாலின் எனும் நான் என துவக்கி வைத்தார், தொடர்ந்து ஸ்டாலின் படிக்க துவங்கியதும் ;
” முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான், சட்டப்படி அமைக்கப்பெற்ற இந்திய அரசின் நம்பிக்கையின் பால் உண்மையான நம்பிக்கையையும், மாறா பற்றும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியும், தமிழ்நாட்டு அரசியலமைப்படியும், கடமையை நிலைநிறுத்துவேன் என்றும், உண்மையாகவும் என் கடமையும் செய்வேன் என்றும் அரசியல் அமைப்பின் சட்டத்தின்படி, ஒருதலை சார்பின்றி, விறுப்பு வெறுப்பின்றி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் உண்மையாக இருப்பேன் என்றும் அரசின் ரகசியங்களை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ அறிவிக்கவோ, வெளிப்படுத்தவோ தெரிவிக்க மாட்டேன் ” என உளமாற உறுதி கூறுகிறேன். இவ்வாறு ஸ்டாலின் உறுதிமொழியை படித்தார்.

தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்களாக துரை முருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். நீர் பாசனத்துறை அமைச்சராக துரைமுருகன் பொறுப்பேற்றுக் கொண்டார்.க.பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். பொதுப்பணித்துறை அமைச்சராக எ.வ.வேலு பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர்.

அனைவரும் பதவி ஏற்று கொண்டவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் புதிய அமைச்சர்களுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித்புகைப்படம் எடுத்துக்கொண்டார்.பதவியேற்பு விழாவையடுத்து, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய அமைச்சர்களுக்கு ராஜ்பவனில் கவர்னர் தேநீர் விருந்து அளித்தார்.

பின்னர் சென்னை- கிண்டி கவர்னர் மாளிகையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்றார்.அங்கு கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஆனந்தத்தில் கண்கலங்கினார்.மேலும் அவரது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். அவரது சகோதரி மு.க.செல்வியும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதன்பின்னர் சென்னை, மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்றார். கலைஞரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதையை செலுத்தினார். தொடர்ந்து அண்ணாவின் நினைவிடத்துக்குச் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்களும் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அண்ணா, கருணாநிதி நினைவிடத்தை தொடர்ந்து பெரியார் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கிருந்து க.அன்பழகன் இல்லம் சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் தலைமைச் செயலகம் சென்றா. தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறையின் மரியாதையை ஏற்றார் . தொடர்ந்து முதல்-அமைச்சர் அறையில் இருக்கையில் அமர்ந்தார்.


1. முதல் அரசாணையாக கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டை ஒன்றுக்கு கருணாநிதி பிறந்த நாளில் ரூ.4000 என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை முதல் தவணையாக மே மாதத்திலேயே ரூ.2000-ஐ குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் அரசாணை. இதன்படி 2 கோடியே, 7 லட்சத்து 66,000 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்.

2. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படுகிறது. அது இந்த மாதம் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

3. மகளிர், பணிக்குச் செல்லும் பெண்கள், படிக்கும் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் திட்டம் நாளை முதல் அமல்.

4. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற திட்டத்தின் கீழ் தேர்தல் பிரச்சாரத்தின்போது பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களில் தீர்வு காண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்கிற திட்டத்தின் கீழ் துறை உருவாக்கப்படுகிறது. இதற்காக ஐஏஎஸ் அந்தஸ்து அதிகாரி நியமிக்கப்படுகிறார்.

5. கொரோனா சிகிச்சை பெறுவோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை செலவுகளை அரசே வழங்கும். ஆகிய 5 முக்கிய கோப்புகளில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

Leave your comments here...