ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.2 ஆயிரம், 25 கிலோ அரிசி இலவசம் – தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அறிவிப்பு

இந்தியா

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதல் முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பல்வேறு தள்ர்வுகளுடன் இன்னும் நீடித்து வருகிறது. கொரோனா ஊரடங்கால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.கொரோனா வைரசின் 2வது அலையில், நாடு முழுவதும் பாதிப்பும், பலியும் தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால், மத்திய அரசு கவலை அடைந்துள்ளது.

இந்த பிரச்னை தொடர்பாக ஏற்கனவே, பல முறை மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி விட்டார். இதனை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களில் பணியாற்றிய ஆசிரியர்களும், பணியாளர்களும் பொருளாதார ரீதியாக பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில், அனைவருக்கும் தலா ரூ.2 ஆயிரமும், 25 கிலோ அரிசியும் வழங்க முதல்-மந்திரி சந்திரசேகரராவ் உத்தரவிட்டுள்ளார்.

Leave your comments here...