சென்னை விமான நிலையத்தில் ரூ 51.28 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் பறிமுதல்.!

தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் ரூ 51.28 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் பறிமுதல்.!

சென்னை விமான நிலையத்தில் ரூ 51.28 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் பறிமுதல்.!

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பணம் கடத்தப்படுவதாக கிடைத்த உளவுப்பிரிவு தகவலின் அடிப்படையில், ஏர் அரேபியா விமானம் ஜி9-472 மூலம் சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த திருச்சியை சேர்ந்த சதக்கத்துல்லா, 37, புறப்பாடு முனையத்தில் சந்தேகத்தின் பேரில் அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டார்.

அவரது பையை சோதனை செய்து பார்த்த போது, 15000 சவுதி ரியால் கண்டறியப்பட்டது. பைக்குள் இருந்த பொட்டலங்களை பிரித்து பார்த்த போது, 26000 சவுதி ரியால்கள், 2400 அமெரிக்க டாலர்கள் கண்டறியப்பட்டன.மொத்தம் ரூ 10.06 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் சுங்க சட்டத்தின் ஃபெமா (பண ஏற்றுமதி மற்றும் இறக்குமதி) ஒழுங்குமுறை, 2015-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.


மற்றுமொரு சம்பவத்தில், வெளிநாட்டுப் பணம் கடத்தப்படுவதாக கிடைத்த உளவுப்பிரிவு தகவலின் அடிப்படையில், ஃபிளை துபாய் விமானம் எஃப் இசட் 8518 மூலம் சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த திருச்சியை சேர்ந்த முகமது அலி அக்பர், 61, தேனியை சேர்ந்த முகமது அப்துல்லா, 37, சென்னையை சேர்ந்த அபு ஜாவித், 29 மற்றும் சிவகங்கையை சேர்ந்த ஷாஜகான், 57, ஆகியோர் பாதுகாப்பு சோதனை பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டனர்.

அவர்களை சோதனை செய்து பார்த்த போது, 126000 சவுதி ரியால்கள், 2300 அமெரிக்க டாலர்கள், 440 குவைத் தினார்கள், 1050 ஓமன் ரியால்கள் அவர்களது பைகளின் பிடிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.மொத்தம் ரூ 41.22 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் சுங்க சட்டத்தின் ஃபெமா (பண ஏற்றுமதி மற்றும் இறக்குமதி) ஒழுங்குமுறை, 2015-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆக மொத்தம், 201700 சவுதி ரியால்கள், 4700 அமெரிக்க டாலர்கள், 1580 குவைத் தினார்கள், 1050 ஓமன் ரியால்கள் என மொத்தம் ரூ 51.28 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் ஐந்து வழக்குகளில் சுங்க சட்டத்தின் ஃபெமா (பண ஏற்றுமதி மற்றும் இறக்குமதி) ஒழுங்குமுறை, 2015-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave your comments here...