அமமுகவுடன் கூட்டணி அமைத்த ஓவைசி கட்சி: 3 தொகுதிகளில் போட்டி!

அரசியல்

அமமுகவுடன் கூட்டணி அமைத்த ஓவைசி கட்சி: 3 தொகுதிகளில் போட்டி!

அமமுகவுடன் கூட்டணி அமைத்த ஓவைசி கட்சி: 3 தொகுதிகளில் போட்டி!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஓவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லீம் கட்சி திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. இதனால் தமிழக முஸ்லிம்களின் வாக்குகள் பிரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த நவம்பரில் நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளில் வென்று நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. இதனால்தான் பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதாக கூறப்பட்டது

பீகாரைத் தொடர்ந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகம், மேற்குவங்கத்தில் போட்டியிடப் போவதாக அசாதுதீன் ஒவைசி நேற்று முன்தினம் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2016 பேரவைத் தேர்தலில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி ஆகிய இரு தொகுதிகளில் ஒவைசி கட்சி போட்டியிட்டு 10,289 வாக்குகளைப் பெற்றது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத ஒவைசி கட்சி, வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக பேரவைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

அதன் படி ஒவைசியின் கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் ஒவைசி கட்சிக்கு கூட்டணி ஏற்பட்டு உள்ளது. ஒவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார். வாணியம்பாடி, சங்கராபுரம், கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்:- அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இடிஹதுல் முஸ்லிமீன் கட்சிக்கு தமிழ்நாட்டில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். இதற்கான ஒப்பந்தத்தில் டிடிவி தினகரன், ஓவைசி கட்சியின் தமிழக தலைவர் வக்கீல் அகமது, பொறுப்பாளர் ரஹமதுல்லா தாயப் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

Leave your comments here...