புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில் 9 மாதங்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது .!

ஆன்மிகம்

புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில் 9 மாதங்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது .!

புகழ்பெற்ற  பூரி ஜெகந்நாதர் கோயில் 9 மாதங்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது .!

ஒடிசா மாநிலம் பூரி நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் 9 மாதங்களுக்குப் பின் இம்மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது. பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் வைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. ஒடிசாவில் கொரோனா தொற்றை தொடர்ந்து, ஒன்பது மாதங்களுக்கு பிறகு பூரி ஜெகந்நாதர் கோவில் நேற்று (டிச.,23) பக்தர்களுக்காக திறக்கப்பட்டது. அத்துடன் முக்கிய தெய்வங்களான பாலபத்ரா, தேவி சுபத்ரா மற்றும் ஜெகநாத் ஆகியோரின் எதிர்பார்க்கப்பட்ட தரிசனம் காலை 7 மணி முதல் துவங்கியது. ஜெகந்நாத்தின் தரிசனம் கிடைக்கப்பெற்றவர்கள் பாக்யவான்கள் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.

கோவில் திறக்கப்பட்ட முதல் 3 நாட்கள் (டிச.,23, 24,25) ஆகிய நாட்களில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் கோவில் சேவையாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுவாமி தரிசனத்திற்காக கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று பூரி கலெக்டர் பல்வந்த் சிங் கூறினார். மேலும் அடையாள சான்று, முக கவசம் அணிவது, சமூக இடைவெளி மற்றும் கைகளை சுத்தமாக வைத்து கொள்வது போன்ற சுகாதார நடவடிக்கையை பின்பற்றுவது அவசியம். கோவில் சேவையாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு முதல் மூன்று நாட்களில் தெய்வங்களின் தரிசனம் அனுமதிக்கப்படும். பூரியில் வசிப்பவர்கள் டிச., 26 முதல் டிச.,31 மாலை வரை கோயிலுக்குள் நுழைய அடுத்த வாய்ப்பு கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

புத்தாண்டு மற்றும் ஜனவரி 2-ம் தேதி அதிகமான அளவில் பக்தர்கள் வர வாய்ப்பு இருப்பதால், அந்த இரு நாட்கள் கோயில் நடை சாத்தப்பட்டு 3-ம் தேதி முதல் மீண்டும் கோயில் நடை திறக்கப்படும்.கோயிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனத்துக்கு வருவதற்கு 48 மணி நேரத்துக்கு முன் கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்று கொண்டு வர வேண்டும். ஆர்ஏடி, ஆர்டிபிசிஆர் பரிசோதனை இரண்டையும் செய்திருக்க வேண்டும். கோயிலில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் அடையாள அட்டை இருந்தால்தான் கோயிலுக்குள் வர முடியும். முதல் கட்டமாக நாள்தோறும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளோம். அதன்பின் ஒருவாரத்துக்குப் பின் படிப்படியாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்’என கூறப்படுகிறது.

Leave your comments here...