ஆஸ்திரேலியா நாட்டின் சான்றிதழ் பெற்று அசத்திய பள்ளி மாணவர்கள்.!

சமூக நலன்தமிழகம்

ஆஸ்திரேலியா நாட்டின் சான்றிதழ் பெற்று அசத்திய பள்ளி மாணவர்கள்.!

ஆஸ்திரேலியா நாட்டின் சான்றிதழ் பெற்று அசத்திய பள்ளி மாணவர்கள்.!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஆஸ்திரேலியா தமிழ் வளர்ச்சி மன்றம் நடத்திய பாரதி விழா போட்டியில் பங்கு பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார் .தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கி ஆஸ்திரேலியா நாட்டின் தமிழ் வளர்ச்சி மன்றம் நடத்திய பாரதி விழா போட்டிகளில் பங்குபெற்றதற்கான சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கினார் .

அவர் பேசுகையில் , மாணவர்களாகிய நீங்கள் வித்தியாசமாக சிந்தியுங்கள். நமது நாட்டில் பலரும் கவிதைகள் சொல்லி உள்ளார்கள். ஆனால் நாம் இன்றும் பாரதியின் கவிதைகள் நினைவு படுத்தி சொல்கிறோம்,அவரை கொண்டாடுகிறோம் . காரணம் பாரதியாருடைய கவிதைகள் புதுமையான முறையில் வித்தியாசமான கருத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

இந்தப் பள்ளியில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இணையவழி நிகழ்வில் பங்கேற்று சிறப்பாக பாரதியார் கவிதை கூறி சான்றிதழ் பெற்றுள்ள இப்பள்ளி மாணவர்களை நினைத்து பெருமை அடைகின்றேன். மகிழ்ச்சி அடைகின்றேன். வித்தியாசமான நிகழ்வுகளை நீங்கள் தொடர்ந்து செய்து உங்கள் கனவுகளை நனவாக்குங்கள். வாழ்த்துக்கள். என்று பேசினார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்துமீனாள், ஸ்ரீதர் ஆகியோர் செய்திருந்தனர்.

பாரதி விழாவில் சிறந்த முறையில் கவிதை கூறியும் , ஓவியங்கள் வரைந்த மாணவர்கள்ஹரிப்ரியா,லெட்சுமி, நதியா,தேவதர்ஷினி,ஜோயல்,நித்திஷ் ,சண்முகம் ஆகியோருக்கு பள்ளி சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார். ஆஸ்திரேலியாவிலிருந்து பாரதி விழாவை இணையம் வழியாக சிறப்பாக நடத்தி மாணவர்களை ஊக்குவித்த ஆஸ்திரேலியா தமிழ் வளர்ச்சி மன்றத்திற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Leave your comments here...