ஆவடி மாநகராட்சி சார்பாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு பாராட்டு விழா .!

தமிழகம்

ஆவடி மாநகராட்சி சார்பாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு பாராட்டு விழா .!

ஆவடி மாநகராட்சி சார்பாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு பாராட்டு விழா .!

சென்னை அடுத்த ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியதற்கு அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நலசங்கம் சார்பாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

சென்னையை அடுத்த ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடா்ந்து கோாிக்கை விடுத்து வந்தனா். அப்பகுதி சட்டமன்ற உறுப்பினரான, தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் மாபா பாண்டியராஜனும் தனது தோ்தல் பிரசாரத்தின் போது ஆவடியை மாநகராட்சியாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டு இருந்தது.இந்த அறிவிப்பின்படி, ஆவடி சிறப்பு நிலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆவடி சிறப்பு நிலை நகராட்சி அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக உரிய பரிந்துரைகள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றை ஆய்வு செய்த தமிழக அரசு இதற்கான அவசர சட்ட மசோதாவை வடிவமைத்தது.இந்த மசோதா தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த ஆளுநர், தனது ஒப்புதலை வழங்கினார்.இதைத் தொடர்ந்து, ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தமிழக அரசு தரம் உயர்த்தி வெளியிட்டது.

இந்நிலையில் இன்று ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியதற்கு அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நலசங்கம் சார்பாகமாஃபா பாண்டியராஜனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நலசங்க தலைவர் என்.தினகரன் TPI அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் நலச்சங்க செயலாளர் சங்கர்-AE, பொருளாளர் சத்தியமூர்த்தி RI, இணைச் செயலாளர் ராகவேந்திரா, துணை தலைவர் ஜாபர், ஆணையர் நாராயணன், மேலாளார் செல்வராணி ,பொறியாளர் வைத்தியலிங்கம், உதவி செயற்பொறியாளர் சத்தியசீலன், நகரமைப்பு அலுவலர் வெங்கடேசன், சுகாதார அலுவலர் மோகன், வருவாய் அலுவலர் இந்திராணி, வருவாய் ஆய்வாளர் பென்சில்லைய, சுகாதார ஆய்வாளர் பிரகாஷ், இளநிலை உதவியாளர் பாலாஜி, துணை வருவாய் அலுவலர் ஜான், மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர், துப்புரவு பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தினகரன் அவர்களுக்கு அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நல சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்தனர்

செய்தி
நிருபர் வாசு

Leave your comments here...