எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் அமையும் : அமையாது என்று சொல்பவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலம் வரும் – அமைச்சர் ஆர். பி.உதயகுமார் ஆவேசம்

அரசியல்

எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் அமையும் : அமையாது என்று சொல்பவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலம் வரும் – அமைச்சர் ஆர். பி.உதயகுமார் ஆவேசம்

எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் அமையும்  : அமையாது என்று சொல்பவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலம் வரும் – அமைச்சர் ஆர். பி.உதயகுமார் ஆவேசம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமங்கலம் ரோட்டரி சங்கம், ஆனந்தம் லயன்ஸ் சங்கம்,சிட்டி லயன்ஸ் சங்கம்,ரோஸ் லயன்ஸ் சங்கம், சுப்ரீம் லயன்ஸ் சங்கம், பேரையூர் மற்றும் ஏழுமலை லயன்ஸ் சங்கம், சார்பாக இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார். அவர் பேசியதாவது:- திருமங்கலம் அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாது என்று அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கூறிவருகின்றனர். மருத்துவமனை அமைய நிதி உதவி செய்யும் ஜப்பான் கூட்டுறவு முகமை பத்து முறை தோப்பூரில் ஆய்வு செய்து தமிழகத்தில் தோப்பூர் தான் சரியான தேர்வு என்று சான்றிதழ் அளித்துள்ளனர் வந்ததால் ஜப்பான் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட முடியவில்லை விரைவில் அவர்களுடன் ஒப்பந்தம் போடப் போகிறோம். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை வராது என்று சொல்பவர்களும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலம் வரும்.

2021ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தலில் ஜெயித்துவிடுவார் என்ற பயத்தில் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். பாராளுமன்றத்தில் தோப்பூரில் எய்ம்ஸ் அமையும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கு நிதி நிலை அறிக்கை கமிட்டியும் அமைத்து இருக்கிறார்கள்.எனவே விரைவில் மருத்துவமனை பணிகள் துவங்கும்.

மதுரை வளர்ச்சி முக்கியமா உதயகுமார் பதவி முக்கியமா என்று கேள்வி வந்தால் மதுரை வளர்ச்சி தான் எனக்கு முக்கியம். தமிழகத்தில் ஒரு கோடியே 87 லட்சம் குடும்பங்களுக்கு மிக்ஸி கிரைண்டர் வழங்கப்பட்டுள்ளது.64 லட்சம் மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு இரும்புக்கரம் கொண்டு காக்கப்படுகிறது.அதனால் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது.

திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி பகுதிகளில் உள்ள கண்மாய்களில் குடிநீர் மராமத்து பணிகள் நடைபெற்றதால் பெரும்பாலான கண்மாய்கள் நிறைந்து விட்டன. திருமங்கலத்தில் 2015ம் ஆண்டு 110 விதியின் கீழ் ரயில்வே மேம்பாலம் மற்றும் பேருந்து நிலையம் அமைக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. விரைவில் பூமி பூஜை நடத்தப்பட்டு பணிகள் துவங்கும். எனவே உங்களுடைய தீர்ப்பு எங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

Leave your comments here...