அலங்காநல்லூர் பகுதியில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் : மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று விவசாயிகள் புகார்.!
- October 27, 2020
- jananesan
- : 696
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரி விவசாயத்தில் 200 ஹெக்டேருக்கு மேல் மக்காச்சோளம் உள்ளிட்ட பயறு தானிய விவசாயம் செய்யப்பட்டுள்ளது.
ஆடிப்பட்டத்தில் விதைப்பு செய்த இந்த தானிய செடிகள் கதிர் விடும் நேரத்தில் இதில் தற்போது அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது இதனால் மகசூல் பாதிக்கு பாதியாக குறைந்து செலவு செய்த பணம் கூட கைக்கு வருமா என்று விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி மாவட்ட ஆட்சியராக இருந்த வினய் அவர்களிடம் அலங்காநல்லூர் பாலமேடு பகுதி சாத்தியார் அணைபாசன விவசாயிகள் சார்பில் படைப்புழு தாக்குதலால் மகசூலையும் வாழ்வாதாரத்தையும் இழந்த விவசாயிகளுக்கு மத்திய மாநில அரசுகள் வழங்கும் விவசாயப் பேரிடர் கால நிவாரண தொகையை இழப்பீட்டு மானியமாக வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுவரை இந்த கோரிக்கை தொடர்பாக எந்த நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர் மேலும் இந்த பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களை சாத்தியார் அணை பாசன விவசாயிகள் மற்றும் பிஜேபி மாநில விவசாய அணி துணை தலைவர் முத்துராமன் மற்றும் மாவட்ட துணைத்தலைவர் சவுடி அம்பலம் ரமேஷ் தங்கத்துரை ஒன்றிய தலைவர் செந்தில்குமார் மாவட்ட செயற்குழு தர்மராஜ் துறைத்தலைவர் துறை செல்வம் வேல்பாண்டி ஒன்றிய தலைவர் பாசன விவசாயிகள் துரைப்பாண்டி. அழகர். பூஞ்சோலை மற்றும் கீழ சின்னம்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தர்மராஜா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பிஜேபி நிர்வாகிகள் இந்தப் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள சாகுபடி செய்த விவசாயிகள் பாதிப்புக்குள்ளான மக்காச்சோள பயிர்களையும் ஆய்வு செய்தனர்.
அப்பொழுது செய்தியாளரிடம் சாத்தியார் அணை பாசன விவசாயிகள் சங்க கெளரவதலைவரும் பிஜேபி மாநில விவசாய அணி துணை தலைவருமான முத்துராமன் ஜி கூறியதாவது:- கடந்த ஆண்டு இதுபோன்ற பாதிப்புக்கு மத்திய மாநில அரசுகள் 100% சதவீதம் அமெரிக்கன் புழுவை கட்டுப்படுத்தும் மருந்து உரம் வழங்கப்பட்டது.ஆனால் இந்த ஆண்டு அதிக பரப்பளவில் மானாவாரி பயிராக மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலும் மிக மிகக் கொடூரமாக உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீட்டை இந்த ஆண்டு மத்திய மாநில அரசுகள் விவசாய பேரிழப்பாக கருதி 50 சதவீத மானியத்தில் மத்திய மாநில அரசு அமெரிக்கன் புழுவை கட்டுப்படுத்தும் மருந்துகள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ஆனால் சரியான நேரத்தில் விவசாயிகளுக்கு கிடைக்காததால் இந்தப் பகுதியில் விவசாயம் ஆதங்கப்பட்டார் இந்த நோய் தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீட்டு அரசு அறிவித்த மானியம் இன்னும் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து கடந்த வாரம் மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம் ஆனால் அதற்கு இதுவரை எந்தவித விசாரணையும் அதிகாரிகள் வந்து விவசாயிகளை சந்திக்கவும் இல்லை என்று புகார் எழுந்துள்ளது .எனவே இந்த நிலை தொடர்ந்து நீடித்து விவசாயிகளுக்கு இழப்பீடு மானியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் இந்த பகுதி விவசாயிகளை ஒன்று திரட்டி பிஜேபி சார்பாக மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
Leave your comments here...