சதுரகிரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் : மழை காரணமாக, தாமதமாக மலைக்குச் செல்ல அனுமதி.!

ஆன்மிகம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல கடந்த 2 நாட்களாக பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்வதால், கோவிலுக்குச் செல்லும் வழிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது. இதனால் மலைக்குச் செல்லும் பக்தர்கள் நீரோடைகளில் குளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். நேற்று இரவு மலைப்பகுதிகளில் மழை பெய்ததால், இன்று 3 வது நாளாக மலைக்குச் செல்லும் பக்தர்கள், தாணிப்பாறை பகுதிகளில் நிறுத்தி வைத்து, காலை 10 மணிக்கு பின்னர் அனுமதி வழங்கப்பட்டது.

சுவாமி தரிசனம் முடிந்தவுடன் உடனடியாக, அடிவாரப்பகுதிக்கு திரும்ப வேண்டும் என வனத்துறையினர் கூறி வருகின்றனர். நாளை ஐப்பசி மாத பௌர்ணமி பூஜைகளுக்காக பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். நாளை சனிக்கிழமை விடுமுறை நாளாக இருப்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave your comments here...