நவராத்திரி நிறைவு விழா அம்பு எய்தல் நிகழ்ச்சி.!
- October 27, 2020
- jananesan
- : 629
மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில் நவராத்திரி விழா நடைபெற்று பத்தாம் நாள் அன்று செய்த நிகழ்ச்சி நடந்தது சோழவந்தான் தென்கரை விக்கிரமங்கலம் தேனூர் திருவளவயநல்லூர் திருவேடகம் ஆகிய கிராமங்களில் நவராத்திரி விழா நடந்தது.
சோழவந்தான் ஜனக நாராயணப் பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா பத்தாம் நாள் நிகழ்ச்சியில் கோயில் வளாகத்தில் அம்பு எய்தல் நடைபெற்றது .ரகுராமன் பட்டர் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.செயல் அலுவலர் சத்யநாராயணன் ஆலய பணியாளர்கள் பூபதி கவிதா வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர் துரோபதி அம்மன் கோவிலில் அம்மன் சர்வ அலங்காரத்தில் கோவில் வளாகத்தை வலம் வந்து கொடிக்கம்பம் முன்பாக அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன் திருப்பதி ஜவர்லால் குப்புசாமி உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பரம்பரை அறங்காவலர் ஆதி பெருமாள் பிரசாதம் வழங்கினார். தென்கரை உச்சி காளியம்மன் கோவில் விக்கிரமங்கலம் மாருதோ ஈஸ்வரர் கோயில் திருவேடகம் ஏலவார்குழலி சமேத ஏடகநாதர் சுவாமி கோவில் தேனூர் சுந்தரவல்லி அம்மன் கோவில் திருவாலவாய் நல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆவியே கோவில்களிலும் நவராத்திரி விழா ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இதில், கலந்து கொண்ட பக்தர்கள் முக கவசம் அணிந்து கைகளும் மிஷினில் கைகழுவி சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
Leave your comments here...