குழம்பிய குட்டையில் திமுக மீன் பிடிக்க நினைக்கிறது – அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேட்டி

அரசியல்

குழம்பிய குட்டையில் திமுக மீன் பிடிக்க நினைக்கிறது – அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேட்டி

குழம்பிய குட்டையில் திமுக மீன் பிடிக்க நினைக்கிறது  – அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேட்டி

மதுரை கீழ ஆவணி மூல விதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் குன்னத்தூர் சத்திரம் புனரமைப்பு பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு ஆய்வு செய்து பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார் ஆய்வில் மாநகராட்சி ஆணையர் விசாகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “977 கோடி மதிப்பில் 8 ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மதுரையில் நடைபெறுகிறது, சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை, 9 ஆண்டுகளில் 3,490 கோடி ரூபாய் சுற்றுலாத்துறைக்கு ஒதுக்கீடு, மதுரையில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் விரைவாக முடிக்க நடவடிக்கை, மதுரையில் மார்ச் மாதத்துக்குள் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் முடிக்கப்படும், 6 ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னைக்கு வர சொன்னதாக எனக்கு தகவல் இல்லை, தேர்தல் காலம் என்பதால் திமுக அதிமுகவை விமர்சனம் செய்கிறது.

ஜனநாயகத்தில் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்துவது இயல்பு, ஆளும் கட்சிக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்யாமல் எதிர்கட்சிகள் சமூக இடைவெளியுடன் போராட்டம் நடத்தலாம், அதிமுகவுக்கு கெட்ட பெயர் கொண்டு வர வேண்டும் என திமுக செயல்படுகிறது, குழம்பிய குட்டையில் திமுக மீன் பிடிக்க நினைக்கிறது, முதல்வரின் நடவடிக்கைக்கு துணை முதல்வர் உறுதுணையாக இருந்து வருகிறார், தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது” என கூறினார்

Leave your comments here...