இந்தியாவிற்கு ரூ.660 கோடி மதிப்பிலான ராணுவ விமான உதிரி பாகங்கள் விற்க அமெரிக்க ராணுவ தலைமையகமான, ‘பென்டகன்’ ஒப்புதல்.!
- October 3, 2020
- jananesan
- : 807
இந்தியாவிற்கு ரூ.660 கோடி மதிப்பிலான ராணுவ விமான உதிரி பாகங்கள் விற்க அமெரிக்க ராணுவ தலைமையகமான, ‘பென்டகன்’ ஒப்புதல்.
அமெரிக்க ராணுவத்தின் சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும், சி., 130 ஜே., என்ற விமானத்தின் உதிரி பாகங்கள், பழுதுபார்க்கும் சாதனங்கள், தரை தளத்தில் உபயோகிக்கப்படும் உபகரணங்கள், ஜி.பி.எஸ்., அமைப்பு உள்ளிட்ட, பல உதிரி பாகங்களை, அமெரிக்காவிடம், இந்தியா கோரி இருந்தது.ஆய்வக உபகரணங்கள், மென்பொருள், தொழில்நுட்ப ஆவணங்கள், பணியாளர்கள் பயிற்சி மற்றும் பயிற்சி உபகரணங்கள் என, 660 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களும் கோரப்பட்டிருந்தன.
இந்நிலையில், இந்த அனைத்து பொருட்களையும், இந்தியாவிற்கு விற்பனை செய்ய, அமெரிக்க ராணுவ தலைமையகமான, ‘பென்டகன்’ நேற்று, அனுமதி வழங்கியது. இது தொடர்பாக, அமெரிக்க பார்லிமென்டிற்கு, பென்டகன் சார்பில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஒப்புதல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா தரப்பில் கோரப்பட்ட அனைத்து பொருட்களையும் வழங்க ஒப்புதல் அளிக்கிறோம். இந்த விற்பனை, வெளியுறவு கொள்கை, மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கும் ஆதரவாக இருக்கும்.
அமெரிக்கா – இந்தியா இடையிலான உறவை மேலும் வலுபடுத்தும். நம் கூட்டாளியான இந்தியாவின் ராணுவ பலத்தை அதிகரிக்கும். தெற்காசியா மற்றும் இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில், அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவற்றிற்கு, இது, முக்கிய சக்தியாக இருக்கும்.
Leave your comments here...