வீரத்துறவி ராமகோபாலன் மறைவுக்கு ஆர்எஸ்எஸ் அகில பாரத தலைவர் மோகன் பகவத் இரங்கல்.!

தமிழகம்

வீரத்துறவி ராமகோபாலன் மறைவுக்கு ஆர்எஸ்எஸ் அகில பாரத தலைவர் மோகன் பகவத் இரங்கல்.!

வீரத்துறவி ராமகோபாலன் மறைவுக்கு ஆர்எஸ்எஸ் அகில பாரத தலைவர் மோகன் பகவத்  இரங்கல்.!

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி நிறுவன தலைவரும் வீரத்துறவியுமான ராமகோபாலன் நேற்று (செப்.,30) முக்தியடைந்தார். அவருக்கு வயது 94.

இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவர் வீரத்துறவி ராமகோபாலன் (94). கடந்த 27 ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவர் விரைவில் குணம்பெற வேண்டி, இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளட்ட பலர் வேண்டி கொண்டனர்.அவரது மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


ஆர்எஸ்எஸ் அகில பாரத தலைவர் (பரம பூஜனீய சர்சங்கசாலக்) மோகன்ஜி பகவத் அவர்களின் இரங்கல் செய்தி:-தமிழ்நாட்டைச் சார்ந்த ஸ்ரீ இராமகோபாலன் ஜி அமரர் ஆனார் என்ற துயரச்செய்தி மிகவும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு பிரகாசமான அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது. அன்னாரது வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றிய எண்ணற்ற தொண்டர்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ஸ்ரீ இராமகோபாலன்ஜியின் போற்றத்தக்க செயல்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகிறோம்.அவர் ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைப்பதலும், சமுதாய மறுமலர்ச்சி ஏற்படுத்துவதிலும் தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணம் செய்தவர். தேசத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான தொண்டு என்றென்றும் நினைவில் கொள்ளப்படும். அன்னாரது ஆத்மா சத்கதி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.ஓம் சாந்தி

Leave your comments here...