கேரள தங்க கடத்தல் வழக்கு: முக்கிய குற்றவாளி சந்தீப் நாயா் அரசு சாட்சியாக மாற விருப்பம்.!

இந்தியா

கேரள தங்க கடத்தல் வழக்கு: முக்கிய குற்றவாளி சந்தீப் நாயா் அரசு சாட்சியாக மாற விருப்பம்.!

கேரள தங்க கடத்தல் வழக்கு: முக்கிய குற்றவாளி சந்தீப் நாயா் அரசு சாட்சியாக மாற விருப்பம்.!

ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முந்தைய ஊழியா்களான ஸ்வப்னா சுரேஷ், சரிதா ஆகியோா் அந்தத் தூதரகத்தின் பேரில் கேரளத்துக்கு தங்கம் கடத்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தனா். கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முதல் சுமாா் ரூ.100 மதிப்பிலான தங்கத்தை கேரள விமான நிலையங்கள் வழியாக இந்தியாவுக்கு அவா்கள் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை என்ஐஏ, சுங்கத் துறை, அமலாக்கத் துறை ஆகியவை விசாரித்து வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக, துாதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர், கர்நாடகாவின் பெங்களூரில், கைது செய்யப்பட்டனர். இவர்கள், கடந்த ஆண்டு நவம்பர் முதல், 100 கிலோவுக்கும் அதிகமான தங்க கட்டிகளை, துபாயில் இருந்து கேரளா கடத்தி வந்தது, விசாரணையில் தெரியவந்தது.இந்த கடத்தல் வாயிலாக கிடைத்த பணம், பயங்கரவாத நடவடிக்கை களுக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கேரள முதல்வரின் முதன்மைச் செயலா் சிவசங்கருக்கும் தொடா்பு உள்ளதா என சுங்கத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தலைமறைவாக உள்ளவா்களுக்கு எதிராக புளூ காா்னா் நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ஸ்வப்னா, சரித், சந்தீப் மற்றும் பைசல் பரீத் ஆகியோர் மீது, யு.ஏ.பி.ஏ., எனப்படும், சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ், என்.ஐ.ஏ., வழக்குப் பதிவு செய்து உள்ளது.இந்நிலையில், வழக்கின் நான்காவது குற்றவாளியான, சந்தீப் நாயர், அப்ரூவராக மாற விரும்புவதாக, கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று மனு தாக்கல் செய்தார்.
‘இந்த வழக்கு தொடர்பான தன் வாக்குமூலம், தனக்கு எதிரான ஆதாரமாகவும் எடுத்துக் கொள்ளப்படும் என்பது நன்கு தெரியும்’ என, அந்த மனுவில் தெரிவித்து உள்ளார்.

Leave your comments here...